நம்ம ஊரு முறுக்குக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா..?

இந்தியாவில் பல ஆண்டுகளாகவே மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம் என்பது மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நம் மக்களின் உணவு கலாச்சாரம் என்பது மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகின்றது. இது நம்மூர் சிறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் நமது தாத்தா மார்கள் கடைகளுக்கு சென்றாலோ அல்லது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் ஸ்னாக்ஸ் என்றாலே அதில் முறுக்கு, மிக்சர் என பலவும் அடங்கும். … Read more

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஜெகன். இவரது மகன் பிரேம்குமார்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று வளர்புரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அரக்கோணம்-சென்னை நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி பிரேம்குமார் … Read more

பிரபல இந்திய ஹாக்கி ஜாம்பவான் வரீந்தர் சிங் காலமானார்..!!

முன்னாள் வீரரான வரீந்தர் சிங் 1972-ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் அணியில் அங்கம் வகித்துள்ளார். இதே போல் 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் வரீந்தர் சிங் முக்கிய வீரராக இருந்தார். 1973-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் வரீந்தர் சிங் இந்திய ஆக்கி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். இது மட்டுமல்லாமல் 1974 மற்றும் … Read more

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி 66 காலி பணியிடங்களுக்கான கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு மார்ச் 4,5,6 ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூலை 13,14,15ம் தேதிகளில் நேர்முகத் தேர்வு – தேர்வர்கள் அசல் … Read more

திருப்பத்தூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன? – முழு விவரம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட ரூ.129 கோடியே 56 லட்சம் செலவில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டிலான 6 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியே 42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: … Read more

உதய்ப்பூர் தையல்காரர் கொலை – அலட்சியம் காட்டினாரா ராஜஸ்தான் போலீஸார்?

புதுடெல்லி: உதய்ப்பூரில் தையல்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மா, பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையல் கடை வைத்திருந்த கன்னையா லால் டெலி (40) என்பவர், கடந்த 10-ம் தேதி சமூக வலைதளங்களில் கருத்து … Read more

சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: சிங்கப்பூரின் ‘டிஎஸ்-இஓ’ உட்பட 3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-53 ராக் கெட் மூலம் இன்று (ஜூன் 30) மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான … Read more

ஆகஸ்டு 6ஆம் நாள் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு ஆறாம் நாள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவிக்காலம் ஆகஸ்டு பத்தாம் நாளுடன் முடிவடைவதால் அந்தப் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக மக்களவைச் செயலர் செயல்படுவார்.   Source link

பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு

ஐதராபாத்: தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ‘சர்காரு வாரிபாட்டா’ என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தனது ஒவ்வொரு படமும் வெளியான பிறகு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், மனைவி நம்ரதா ஷிரோத்கர் மற்றும் மகன், மகளுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் அவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை நேரில் சந்தித்தார். பிறகு அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ள மகேஷ் பாபு, ‘பில்கேட்சை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகம் கண்ட மிகப்பெரிய தொலைநோக்குப் … Read more

பல பொருட்கள் விலை அதிகரிக்கும்| Dinamalar

சண்டிகர்: கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பல மாநிலங்கள் ஜி.எஸ்.டி., இழப்பீட்டை நீட்டிக்க கோரின. ஆனால், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. அதே சமயம் பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டு உள்ளதால், அவற்றின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். பரிந்துரைகள் கடந்த இரண்டு நாட்களாக, சண்டிகரில் நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஜி.எஸ்.டி., அறிமுகத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்டும் … Read more