ஓபிஎஸ் – இபிஎஸ் சண்டை.! நான் விலகிக்கொள்கிறேன்… டிவிட்டில் டிவிஸ்ட் வைத்த அதிமுகவின் முக்கிய புள்ளி.!

அதிமுகவின் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் பதிவில் டுவிட்டர் பதிவில் “நதிக்கரைகள் இருகரைகள் என்ற நம்பிக்கை தகர்ந்ததால் விலகுகிறேன்” என்று மருது அழகுராஜ் விளக்கமளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயத்தில் எடப்பாடிபழனிசாமி தரப்பிலும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் … Read more

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு  முயன்றதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், உறவினர் வீட்டில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட சிறுமி, கிருமி நாசினியை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கருமுட்டை விற்பனை தொடர்பாக ஆந்திரா மற்றும் தமிழக மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஈரோடு காவல்துறையினர், மருத்துவர்களிடம் இன்று விசாரணை நடத்தினர்.  Source link

“இளங்கோவடிகள் குறிப்பிட்ட சிறந்த மன்னன் போல் பிரதமர் இருப்பார்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

வேலூர்: “2047-ல் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர் வெகுவாக பாராட்டினார். அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் இணைந்து 5 நாட்கள் நடத்தும் பாலாறு பெருவிழா இன்று தொடங்கியது. இவ்விழா ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஸ்ரீ நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக … Read more

கனேடிய வங்கியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் மரணம்

கனேடிய வங்கியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர், ஆறு அதிகாரிகள் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வங்கியில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது கனேடிய பொலிசார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர் மற்றும் ஆறு அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், வெடிக்கும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அருகிலுள்ள வீடுகள் காலி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவசரகால பதிலளிப்பு குழு உறுப்பினர்கள் அமெரிக்க மாநிலமான வாஷிங்டனின் எல்லைக்கு அருகில் உள்ள வான்கூவர் தீவில் உள்ள சானிச்சில் … Read more

ஜூலை 30 ல் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலை புக் செய்ய வெயிட்டிங்கா….. டெலிவரி வெயிட்டிங் டைம் 22 மாதங்கள் ?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்கார்பியோ N மாடல் SUV யை ஜூன் 27 அன்று அறிமுகம் செய்தது மஹிந்திரா நிறுவனம். இதன் முன்பதிவு ஜூலை 30 ம் தேதி துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என ஐந்து வேரியண்ட்களில் வர இருக்கும் இந்த கார் டீசல் மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 11.99 லட்ச ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 19.49 லட்ச ரூபாய் வரை வேரியண்ட் மற்றும் … Read more

முதல் முறையாக ரூபாய் மதிப்பு 79 ஆக சரிந்தது

புதுடெல்லி: உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால், உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைகிறது. இந்நிலையில், நேற்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.85 ஆக இருந்த நிலையில், வர்த்தகம் முடிவில் மேலும் 18 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் … Read more

தனியார் நிறுவனங்கள் எண்ணெய் விற்பனை கட்டுப்பாட்டை நீக்கியது அரசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தனியார் எண்ணெய் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுஉள்ளது.டில்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:தற்போது தனியார் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க … Read more

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி

விஜய் டிவியின் நடிகர்கள் பலரும் விரைவிலேயே சினிமாவிலோ, சீரியலிலோ நடிகர்களாகி விடுகிறார்கள். அந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மரியானா ஜூலி. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு கெட்டபெயரை வாங்கி வெளியேறிய ஜூலி, கடைசியாக நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார். தற்போது ஜூலிக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், ஜூலி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடரான 'தவமாய் தவமிருந்து' என்ற சீரியலில் … Read more

போலந்தில் ராணுவ தளம்: அமெரிக்கா அமைக்கிறது

மாட்ரிட்:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, போலந்து நாட்டில் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நடந்து வருகிறது .மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேட்டோ பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசினார்.பின்னர் ஜோ பைடன் கூறியதாவது:நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. இம்மாநாட்டில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைளால், எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் … Read more

உயர் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. பிரவீன் சூட் ஆலோசனை

பெங்களூரு: போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெங்களூருவில் நடந்து வரும் சாலை அமைத்தல், மெட்ரோ ரெயில் பாதை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் காரணமாக நகரின் முக்கிய ஜங்ஷன்களில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து 2 நாட்களுக்கு முன்பு, போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது பெங்களூருவில் நிலவும் … Read more