இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகல் ?

பர்மிங்காம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக … Read more

குரங்கு அம்மை நோயை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் – தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம்

ஜோகன்னஸ்பர்க், குரங்கு காய்ச்சலை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அந்நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுண் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது. இது தொடர்பாக தென்னாப்பிரிக்க சுகாரதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவுவதை தடுப்பது தொடர்பாக பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை என்றாலும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை … Read more

வெளிநாட்டு சுற்றுப்பயணமா? எளிதில் விசா கிடைக்க இந்த நாடுகளை தேர்வு செய்யுங்கள்!

வெளிநாடு செல்பவர்களுக்கு விசா எடுப்பது என்பது தற்போது மிகவும் அரிதான வேலையாக உள்ளது. ஒரு சில நாடுகள் விசா வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும் என்பதும் அந்த நிபந்தனைகளை தாண்டி விசா பெறுவது என்பது பெரும் வேலையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாய் அங்கன்வாடி ஊழியர்.. மகனுக்கு ரூ.1.8 கோடி சம்பளம்.. ஓரே நேரத்தில் 3 நிறுவனத்தில் வேலை..! ஆனால் அதே நேரத்தில் சில நாடுகள் இந்தியர்களுக்கு மிக எளிதில் விசா வழங்கும் நடவடிக்கை எடுத்துள்ளன. அவ்வாறு … Read more

புதுமுறிப்பு மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டி: ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வு

கிளிநொச்சி மாவட்ட புதுமுறிப்பு பகுதிக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுமார் 16.2 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை பார்வையிட்டார். இதன்போது குறித்த தொட்டிகளின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டார். துறைசார் அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!

கோவை மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பா(23). இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு கமலி(20) என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. அய்யப்பா திருமணத்திற்காக அப்பகுதியில் இருந்தவர்கள் இடம் 28,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை சரியான நேரத்தில் திருப்பி தர முடியாததால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி … Read more

டீஸ்டா செடல்வாட் கைது: ஐ.நா அதிகாரி அறிக்கை தேவையற்றது; வெளியுறவு அமைச்சகம் பதில்

சமீபத்தில், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தின் கருத்து அவசியமில்லாதது என்று வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை கூறியது. “இந்த கருத்துக்கள் முற்றிலும் தேவையில்லாதது மற்றும் இது இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறை அமைப்பில் தலையிடுவதாகும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார். “இந்தியாவில் உள்ள அதிகாரிகள், நிறுவப்பட்ட நீதித்துறை செயல்முறைகளின்படி கண்டிப்பாக சட்ட மீறல்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இத்தகைய … Read more

ஓபிஎஸ் திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்குத் துரோகம் செய்வதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

அதிமுகவுக்குத் துரோகம் செய்யும் ஓ.பன்னீர்செல்வத்தின் தூண்டுதலாலேயே திமுக அரசு எஸ்.பி.வேலுமணி மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காவல்துறையும், அரசும் கட்டுப்படுத்தாமல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். Source link

'எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டி, அகில இந்திய அரசியலுக்கு திமுக முயற்சிக்கிறது' – ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் எதிர்க்கட்சியை குற்றம்சாட்டி, அகில இந்திய அரசியலுக்கு தாவ திமுக முயற்சிக்கிறது என, மதுரையில் தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறினார். மதுரை மாநகர தமாகா தலைவராக இருந்த சேது ராமன் சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு பதிலாக புதிய மாநகர தலைவராக ராஜாங்கம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காமராசர் சாலையில் செயல்பட்ட தமாகா மாநகர மாவட்ட அலுவலகம் பைபாஸ் ரோடு குரு தியேட்டர் அருகே மாற்றப் பட்டது. இந்த அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திறந்தார். இதன்பின், … Read more

பணம் அச்சிடுவது தொடர்பில் பிரதமர் ரணிலின் புதிய அறிவிப்பு

பணம் அச்சிடும் நடைமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.   பணம் அச்சிடும் நடைமுறை நிறுத்தப்படும என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பணம் அச்சிடுவது நிறுத்தப்படும் அடுத்த வருடத்தின் முற்பகுதி முதல் இவ்வாறு பணம் அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நாட்டுக்கு வரவுள்ள எரிபொருள் தாங்கிய கப்பல்  எதிர்வரும் 24 நாட்களின் பின்னரே பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று … Read more

உத்தவ்தாக்கரே தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்.. அவுரங்காபாத், ஓஸ்மானாபாத், நவி மும்பை விமானநிலையத்தின் பெயர்கள் மாற்றம்

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே தலைமையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் அவுரங்காபாத் நகரின் பெயரை சாம்பாஜி நகர் என்றும் ஓஸ்மானாபாத்தின் பெயரை தாராசிவ் என்றும் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல், நவி மும்பை விமானநிலையத்தின் பெயரை டிபி பட்டேல் சர்வதேச விமானநிலையம் என்று பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. உத்தவ்தாக்கரே அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அமைச்சரவை இந்த அவசர முடிவுகளை எடுத்துள்ளது. கூட்டத்தில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, சொந்த … Read more