தற்செயலாக வந்த ரூ.6.45 கோடி சம்பளம்! பணத்துடன் தப்பியோடிட நபர்

தற்செயலாக ரூ.6.45 கோடி சம்பளம் வாங்கிய சிலி நாட்டைச் சேர்ந்த நபர் பணத்துடன் காணாமல் போயுள்ளார். சிலி நாட்டில் ஒருவர் இலங்கை பண மதிப்பில் சுமார் 6.45 கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளார். அவருக்கு தற்செயலாக 286 மடங்கு சம்பளம் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது. மே மாதத்தில், நிறுவனம் ரூ. 1,95,000 (500,000 சிலி பெசோக்கள்) சம்பளம் வாங்கும் ஒரு ஊழியருக்கு தற்செயலாக சுமார் ரூ. 6.45 கோடியை (165,398,851 சிலி பெசோக்கள்) செலுத்தியது. பின்னர், நிறுவனத்தின் … Read more

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 4ந்தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஜூலை 10–ந்தேதி வெளியாவதாக தகவல்…

டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 4ந்தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஜூலை 10–ந்தேதி வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021–22ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெற்றது. இதேபோல 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும்,  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 35 … Read more

ரூ.2,516 கோடியில் 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் கணினி மயம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை ரூ.2,516 கோடியில் கணினி மயமாக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்காகவும் நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுக்குள் கணினி … Read more

ஜூலை 5 முதல் வேட்பு மனு தாக்கல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘துணை ஜனாதிபதி தேர்தல், ஆக., 6ம் தேதி நடக்கும். அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்’ என, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், ஆக., 6ல் தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அன்றைய தினமே … Read more

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனே – நயன்தாரா

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து 20 நாட்கள் அவர் ஜவான் படப்பிடிப்பில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது .இந்த நிலையில் இந்த ஜவான் படத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தில் அவர் நடிக்கும் … Read more

செனகலில் படகு கவிழ்ந்து 13 பேர் பரிதாப பலி| Dinamalar

டாக்கர்:மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலில் இருந்து, ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், 13பேர் இறந்தனர்.மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் வறுமையும், வன்முறையும் அதிகரித்துள்ளன. இதனால், அந்நாடுகளில் இருந்த பலர் , ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய, ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், செனகலில் இருந்து 150க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிய படகு, ஐரோப்பா நோக்கி கடலில் சென்றது. செனகலின் கசாமான்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, படகு திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, படகு கவிழ்ந்தது. தகவல் அறிந்து … Read more

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் எடியூரப்பா…!

பெங்களூரு: பதவி ராஜினாமா கர்நாடக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் எடியூரப்பா. குறிப்பாக பா.ஜனதாவின் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர். அது மட்டுமல்ல லிங்காயத் சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் வலுவான தலைவர். இப்படி பலம் பொருந்திய தலைவராக எடியூரப்பா இருக்கிறார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து வயது மூப்பு காரணமாக எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். கண்ணீர் மல்க பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவியில் எடியூரப்பாவின் … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

காலே, இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ,இலங்கை காலேவில் இன்று தொடங்கியது . டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனால் அந்த அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் இழந்தது.இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்லா மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து .58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . இறுதியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளை … Read more

இலங்கை வர்த்தக மந்திரி உடன் இந்திய தூதர் சந்திப்பு

கொழும்பு, இலங்கை தொழில் மந்திரி நலின் பெர்னாண்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்திய தூதர் இன்று தொழில் துறை மந்திரி நலின் பெர்னாண்டோவை சந்தித்தார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக அளவை அதிகரிப்பது, வணிக இணைப்புகளை எளிதாக்குவதற்கான தளங்களை உருவாக்குவது போன்ற இருதரப்பு வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இருவரும் விவாதித்தனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த … Read more

அதல பாதாளத்தில் ரூபாய் மதிப்பு.. மீண்டும் மீண்டும் சரிவு.. இனி என்னவாகுமோ?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவு மோசமான சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாயின் மதிப்பானது மேற்கோண்டு சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் தொடர்ந்து கணித்து வருகின்றனர். இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில்78.77 ரூபாயாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்திருந்த நிலையில், இன்று 78.95 ரூபாய் என்ற வரலாற்று சரிவினைக் கண்டுள்ளது. வரலாற்று சரிவில் ரூபாயின் மதிப்பு.. அன்னிய முதலீடு வெளியேற்றம்.. என்ன காரணம்..?! முதலீடுகள் வெளியேற்றம் அமெரிக்க … Read more