அமைச்சர் பீரிஸ் ருவாண்டாவின் கிகாலியில், நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பு

2022 ஜூன் 24 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற 2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொண்டார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக ஜூன் 23ஆந் திகதி பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ருவாண்டாவின் ஜனாதிபதி பால் ககாமே தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், அரச தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் … Read more

நடிகை மீனா கணவரின் திடீர் மரணத்துக்கு என்ன காரணம்?

தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்த நடிகர் பூ ராமு, நடிகை மீனாவின் கணவர் வித்யாசகர் இருவரின் அடுத்தடுத்த மரணங்களால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகர் இளம் வயதில் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மீனாவின் கணவருக்கு என்ன ஆனது? தமிழ் சினிமாவில் 1982-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்தி என முன்னணி நடிகர்களுன் ஜோடியாக … Read more

உதய்பூர் நகரை கன்னையா லால் படுகொலை சம்பவம்… மாநில முதலமைச்சர் மீது அண்ணாமலை தாக்கு.!

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர்,  நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஒரே காரணத்திற்காக, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்படவே, ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதற்கிடையே, கொலையாளிகள் இருவரையும் செய்த என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்..

சென்னையில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியரான ஸ்ரீதர், தன்னிடம் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகள், ஆடியோ, வாட்ஸ் அப் சாட்டிங் உள்ளிட்ட ஆதாரங்களுடன் குழந்தை நல குழுவிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் குழந்தைகள் நலக்குழு … Read more

ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் விழிப்புணர்வு: ரூ.4.75 கோடி ஒதுக்கீடு

சென்னை: ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த 4.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையின்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டது. இதில் 3 அறிவிப்புகளை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85 லட்சம் ரூபாய் செலவினத்தில் 1,000 மின்னணு … Read more

பள்ளி குழந்தைகளின் பேனா, பென்சில், ரப்பர் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு…

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பள்ளி குழந்தைகளின் பேனா, பென்சில், ரப்பர் மற்றும் அஞ்சல் சேவை, சோலார் வாட்டர் ஹீட்டர்கள் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. 2நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றும், இன்றும்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.  இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில், சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் … Read more

துணை ஜனாதிபதிக்கு ஆக.6ம் தேதி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் வரும் 5ம் தேதி தொடக்கம்

புதுடெல்லி: நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 16வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் … Read more

‛ஆஸ்கர் உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை-அமெரிக்காவின் ‘ஆஸ்கர்’ அகாடமியில், நடிகர் சூர்யா உள்ளிட்ட, 397 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் அகாடமி, ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகையர் உள்ளிட்டோரை தேர்வு செய்து விருது வழங்குகிறது. இந்த அமைப்பு, அமெரிக்கா நீங்கலாக, 53 நாடுகளில், திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த சேவையாற்றி வரும் 397 கலைஞர்களை, ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளது. ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சூர்யா, … Read more

சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்துள்ளார் சிம்பு. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேநாளில் ஜெயம்ரவி நடித்துள்ள அகிலன் … Read more

இலங்கை சட்டசபை தேர்தல் இந்தியாவிடம் கோரிக்கை| Dinamalar

கொழும்பு:இலங்கையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கான சட்டசபை தேர்தல்களை விரைவில் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அந்நாட்டை சேர்ந்த தமிழர் கட்சிகள் இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.கடந்த, 2018ல் இலங்கையில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது எழுந்த சட்ட சிக்கல் காரணமாக ஒன்பது மாகாண சட்டசபை தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது வரை அந்த மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அந்த ஒன்பது மாகாணங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த, … Read more