பிரித்தானியாவில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்!

பிரித்தானியாவின் லிங்கன்ஷையரில் (Lincolnshire) உள்ள கிரந்தம் தெருவில் மூன்று வயது சிறுமிக்கு அத்துமீறி முத்தமிட்டு சென்ற இரண்டு இளைஞர்களை தீவிரமாக தேடி வருவதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிங்கன்ஷையரின் கிரந்தம் (Grantham) தெருவில், பாரோபி கேட் பகுதியில் தாயுடன் நடந்து சென்ற மூன்று வயது சிறுமிக்கு இரண்டு இளைஞர்கள் அத்துமீறிய முறையில் முத்தமிட்டு சென்றது சங்கடத்தை ஏற்படுத்தி சென்றதை அடுத்து பிரித்தானிய பொலிஸார் அந்த இளைஞர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். வெள்ளை மற்றும் சாம்பல் நிற ஜாக்கெட் அணிந்த … Read more

உதய்பூர் கொலை வழக்கு: என்ஐஏ விசாரணை – பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளது என ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் தகவல்…

ஜெய்ப்பூர்:  காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், பட்டப்பகலில் டெய்லர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்த கொலை செய்து, மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திய மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதாகவும், இது இரண்டு மதத்தினருக்கு இடையிலான சண்டை இல்லை என்றும்  தெரிவித்துள்ளார்.  ராஜஸ்தான் … Read more

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி நீட்டிப்பை ஏற்க வேணுகோபால் மறுப்பு: 3 மாதங்களுக்கு மட்டும் சம்மதம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் இன்றோடு முடிந்த நிலையில், ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று 3 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகும் அதிகாரம் கொண்டவர் தான் தலைமை வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக ஜனாதிபதியின் சார்பாகவே நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கும் அளவிற்கு உட்சபட்ச அதிகாரம் கொண்டது இந்த பதவியாகும். இந்த நிலையில், முன்னதாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த … Read more

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம்: பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்ற வழக்கில் அச்சிறுமியின் தாய் இந்திராணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு குழந்தை நல காப்பத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நாளை ( ஜூன் 30ம் தேதி) ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது. … Read more

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால்..? – உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 16 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதம் என்று சிவசேனா தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க … Read more

ஆள்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் மீட்பு| Dinamalar

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்து கிடந்த ஆள்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் மீட்பு படையினரால் மீட்க்கப்பட்டான்.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம், நாராயண்பூர் என்ற கிராமத்தில் இன்று , விவசாயி ஒருவரின் , திபேந்திர யாதவ் என்ற 5 வயது சிறுவன் , அங்குள்ள திறந்து கிடந்த ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு

'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு போன்ற பல நல்ல படங்களை இயக்கிய சுந்தர்.சி கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது . சுந்தர்.சி இப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தலைநகரம் 2 படத்தின் … Read more

மனைவி, 3 மாத குழந்தையை கொன்றதாக கைதான வாலிபர் விடுவிப்பு-கீழ்கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது

பெங்களூரு: காதல் திருமணம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா டாபஸ்பேட்டை அருகே பேகூர் கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 32). இவர் தனது கிராமத்தை சேர்ந்த பாக்யம்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். மேலும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி கிரீஷ், பாக்யம்மாவிடம் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். இதனால் பாக்யம்மா கர்ப்பம் அடைந்தார்.இதுபற்றி அறிந்த கிரீஷ், பாக்யம்மாவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். பின்னர் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்தார் உத்தரவை தொடர்ந்து கிரீஷ், பாக்யம்மாவை … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் -பிரான்ஸ் நாட்டின் ஹார்மோனி டான் ஆகியோர் மோதினர். ஒரு வருடத்திற்குப் பிறகு டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் களத்திற்கு திரும்பியதால் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் … Read more

ரஷிய ருபிளின் வீழ்ச்சி வணிகங்களை பாதிக்கலாம் – அதிகாரிகள் எச்சரிக்கை

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதன்காரணமாக ரஷியாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்,அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷியாவின் அந்நிய செலவாணி மதிப்பானது 52.9 ஆக உள்ளது. இது குறித்து ரஷிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் கூறுகையில், ” கடந்த 7 ஆண்டுகள் இல்லாத அளவில் ரஷியாவின் ரூபிள் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த … Read more