யாரும்மா நீ.. 32 வயதில் 10 ப்ரேவேட் ஜெட்-க்கு ஓனர்..!

22 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் நம்மில் பலரின் பதில் என்னவாக இருக்கும்? நிச்சயம் பலரும் வேலை, கல்வி, வேலை தேடுவது என இருக்கும். ஆனால் தனது 23 வயதில் விமான போக்குவரத்து தொடர்பான ஸ்டார்ட் அப்பை நிறுவியவர் தான் கனிகா டேக்ரிவால். ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..! அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் போய், இன்று அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க … Read more

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்ததுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த 21 ஆம் திகதி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 366 ஆக இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 970 ஆக இருந்தது. இதன் மூலம் ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

வீடியோ: நாகப் பாம்பை ஆக்ரோஷமாக கடித்துக் குதறிய கீரி; முடிவு படு சோகம்

பாம்புக்கு கீரி பரம எதிரி என்பது அனைவருக்கும் தெரியும். கீரி சிரிய கால்களை கொண்ட குட்டையாக விலங்குதான் என்றாலும் கூட எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும் தனது அசாத்திய திறமையால் வீழ்த்தும் வல்லமை கொண்டது. இதில் உலகின் கொடிய விஷம் கொண்ட முக்கியமான பாம்பு வகைகளில் ஒன்றாக ராஜநாகம் கூட கீரியிடம் தோற்ற சரித்திரம் உள்ளது. கீரியின் உடலில் இயல்பாவே விஷத்தினை எதிர்க்கும் சக்தி இருப்பதால் பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்வதில்லை. இதனால் கீரி பாம்பை … Read more

ESIC வேலைவாய்ப்பு.. தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே.!

ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-II (ஜூனியர் ஸ்கேல்) பதவிக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 26/07/2022 தேதியின்படி 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ESIC ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு. SC/ST/OBC/PWD/Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசாங்கத்தின் படி தளர்வு உண்டு.  தகுதி : இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956 இன் மூன்றாம் அட்டவணையின் (உரிம தகுதிகள் … Read more

சூர்யாவை உறுப்பினராக அழைப்பு விடுத்து கெளரவித்த ஆஸ்கர்; பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது அறிவிக்கப்படும் போது அனைவரது மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுத்தான் செல்லும். ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுக்கு ஒருசில இந்தியப் படங்கள் பரிந்துரை செய்யப்படும். சத்யஜித் ரே ஏ.ஆர் ரஹ்மான், உள்ளிட்ட சிலர் ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கின்றனர். சூர்யா , கஜோல் ஆனால் தற்போது ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆஸ்கர் அமைப்பு. இந்திய நடிகையான கஜோலும் ஆஸ்கர் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 2022-ம் ஆண்டிற்கான … Read more

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்…! இறப்பின் பின்னணி இது தான்

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் பலியாகவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியம், 6 மாதமாக சிகிச்சையில் இருந்த அவருக்கு, ரத்தம் சார்ந்த மாற்று உறுப்புகள் கிடைக்காததால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுத்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் தகவல் தவறு ஆகும். அவர், கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, … Read more

மேகேதாட்டு அணை | கர்நாடகாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

வேலூர்: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

உதய்பூர் கொலை | “20 வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்தவர் ரியாஸ்” – சகோதரர் வெளியிட்ட தகவல்கள்

புதுடெல்லி: ராஜஸ்தானின் உதய்பூரில் தையல் கடை உரிமையாளர் கன்னையா லால் டெலி (40) படுகொலை வழக்கில் கைதான முகம்மது ரியாஸ் அட்டாரி (38) குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. ரியாஸ் அட்டாரியின் உடன் பிறந்த சகோதரரான அப்துல் அயூப் லோஹர் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் ரியாஸ் குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “என்னுடன் பிறந்த பத்து பேரில் நான் இரண்டாவது சகோதரன். 10-வதாக பிறந்தவர் ரியாஸ். எங்கள் தந்தை இறந்த பின்னர், … Read more

சபையை எல்லாம்கூட்ட வேண்டாம்… நானே போயிடுறேன்… பதவியை ராஜினாமா செய்த முதல்வர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு, அதனை அவர் கடிதமாகவும் அனுப்பி இருந்தார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் … Read more

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

தேவாலயம் ஒன்றில் ஞானஸ்தானம் எடுப்பதற்காக குளியல் தொட்டியில் மூழ்கி எழுந்த இளைஞர் ஒருவர் மீது அருகில் வைக்கப்பட்டிருந்த மைக் உரசியதால் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். புது நன்மைக்கு ஜெபம் சொன்ன பாதிரியாரை மிரள வைத்த சம்பவத்தின் நேரடி காட்சிகள் வெளியாகி உள்ளது. மகராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சலிஸ்பரி பார்க் தேவாலயத்தில் இளைஞர் ஒருவருக்கு ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புது நன்மை எடுக்கும் இளைஞரை தேவாலயத்தில் உள்ள புனித நீர் தொட்டிக்குள் … Read more