இலங்கையின் பணவீக்கம் சடுதியாக உயர்வு

2022 ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 54.6 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதத்தில் இருந்து 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், போக்குவரத்து பணவீக்கம் 128 வீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

சீனா முழுவதும் 22 பேருக்கு மட்டுமே கொரோனா : பீஜிங், ஷாங்காய் நகரங்களில் பாதிப்பு இல்லை

4 மாதங்களுக்கு பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் அந்நகரங்களில் கொரோனா தொற்று பரவிய நிலையில், தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளாகின. இந்நிலையில், பீஜிங், ஷாங்காயில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதுடன், நாடு முழுவதும் 22 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.  Source link

மராட்டியத்தில் பாஜக – சிவசேனா ஆட்சி… புதிய முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே

மகாராஷ்டிரத்தில் பாஜக – சிவசேனா கூட்டணி சார்பில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்க உள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் 39 பேரும் அறிவித்தனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியனார். இந்நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் சிண்டே ஆகியோர் மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை முறைப்படி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு ஆதரவளிக்கும் … Read more

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 4 ஆண்டுகளுக்குள் நடக்கவுள்ள 5-வது தேர்தல்!

இஸ்ரேல் நாடாளுமன்றம் 4 ஆண்டுகளுக்குள் ஐந்தாவது தேர்தலை நடத்த உள்ளது. இஸ்ரேலில் இன்று எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தைக் கலைத்ததால், நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் ஐந்தாவது பிரதமர் தேர்தல் நடக்கவுள்ளது. இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசெட் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்த நஃப்தலி பென்னட் பதவி விலகுகிறார். இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1-ஆம் திகதி புதிய பிரதமருக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, வெளியுறவு மந்திரி யாைர் லாபிட் (Yair Lapid) நள்ளிரவில் தற்காலிக … Read more

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மாற்றாக, அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அங்கீகாரம், எஸ்பிஐ வங்கிக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மூலமாக 21வது … Read more

மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா

குட்டி புலி, கொம்பன், மருது போன்ற படங்களை தொடர்ந்து தற்போது கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் விருமன் படத்தை இயக்கி இருக்கிறார் முத்தையா. இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது அவர் தொடங்கி உள்ளார். வழக்கம்போல் மதுரை மண்வாசனை கதையில் உருவாகும் அந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கப் போகிறார். இதற்காக ஆர்யாவை பக்கா வில்லேஜ் கெட்டப்புக்கு மாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. … Read more

அருவருப்பான தலைவர்கள்:புடின் பதிலடி| Dinamalar

மாஸ்கோ:”மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர்,” என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.கராத்தே வீரரான ரஷ்ய அதிபர் புடின், வெற்றுடம்புடன் அவ்வப்போது செய்யும் சாகசங்கள், ஊடகங்களில் வெளியாவது வழக்கம். இதை சில தினங்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ‘ஜி-7’ மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கிண்டல் செய்தனர்.இது பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘நாங்களும் உடைகளை கழற்றினால் புடினை விட வலிமையானவர்கள் என்பது தெரியும்’ என்றார். … Read more

தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

தார்வார்: ரூ.10 லட்சம் நிவாரணம் பெலகாவி மாவட்டம் பாலிகுந்தரா கிராமத்தை சேர்ந்தவர் யூசுப். இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அந்த குழந்தையை தெரு நாய் கடித்து கொன்று இருந்தது. ஆனால் தெரு நாய் கடித்து குழந்தை பலியானதற்காக பெலகாவி மாநகராட்சி சார்பில் எந்த நிவாரணமும் வழங்காமல் இருந்தது. இதுபற்றி தார்வார் ஐகோர்ட்டு கிளையில் யூசுப் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது குழந்தை தெரு … Read more

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு

திண்டுக்கல், 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது. தினத்தந்தி Related Tags : டிஎன்பிஎல் மதுரை பந்துவீச்சு TNPL Madurai Bowling

நிலக்கரி தேவை அதிகரிப்பால் சுரங்கப் பணிகளை தொடர செக் குடியரசு முடிவு

ப்ராக், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ரஷிய நிலக்கரியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யதது. இதன் காரணமாக செக் குடியரசு நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்தாக, செக் குடியரசு தனது நிலக்கரி சுரங்கங்களில் பணியை நிறுத்தி வைக்க திட்டிமிட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அந்த சுரங்கங்களில் மீண்டும் பணியை தொடர அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் நிதி மந்திரி தெரிவிக்கையில், நாட்டின் வடக்கு பகுதியில் … Read more