பரிசாக வந்த கைக்கடிகாரங்களை விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனக்கு பரிசாக வந்த மூன்று கைக்கடிகாரங்களை விற்று 36 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் சம்பாதித்தார். இம்ரான் கான் தோஷகானாவிடமிருந்து மொத்தமாக 154 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்புள்ள மூன்று கைக்கடிகாரங்களை உள்ளூர் வாட்ச் டீலருக்கு விற்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. தோஷகானா என்பது 1974-ல் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் அமைச்சரவைப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான துறையாகும். இதன் முக்கிய நோக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வெளியுறவு செயலாளர்கள், ஜனாதிபதி … Read more

தமிழ்நாட்டில் இன்று 1,827 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 771 பேருக்கு பாதிப்பு…

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய மொத்த பாதிப்பில் 70 சதவீதம் (1278) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ளது. சென்னையில் 771, செங்கல்பட்டில் 316, திருவள்ளூரில் 134 மற்றும் காஞ்சிபுரத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 85, கன்னியாகுமரி 65, திருச்சி 47, திருநெல்வேலி மற்றும் மதுரையில் தலா 34 பேருக்கும், தூத்துக்குடி 31, விருதுநகர் 29, சேலம் 25, ஈரோடு 18, … Read more

கஞ்சா வியாபாரிகளின் ரூ. 5.50 கோடி சொத்துகள் முடக்கம்

மதுரை: மதுரையில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதானவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமான ரூ. 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.மதுரை, ஒத்தக்கடையில் உள்ள அபார்ட்மென்ட் குடியிருப்பில் 170 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக முனிச்சாலை பகுதியை சேர்ந்த காளை, இவரது மனைவி பெருமாயி மற்றும் பேரையூர் அருகே உள்ள கம்மாளபட்டியை சேர்ந்த அய்யர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான இவர்கள் … Read more

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம்

டெல்லி: குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கருத்துக்கு இந்திய நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவதாக என  வெளியுறவுத்துறை கூறியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த … Read more

விதிகளை மீறி விலங்குகள் கொண்டுவரப்படவில்லை என்பதை உறுதி செய்க -அரசுக்கு கோர்ட் உத்தரவு

மிருகவதை தடை சட்ட விதிகளை மீறி, பசுக்கள், ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளை கொண்டு வரவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் மிருகவதை தடைச் சட்ட விதிகளை பின்பற்றாமல், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளை கொண்டு செல்ல தடை விதிக்கக்கோரி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஒவ்வொரு லாரிகளிலும் அதிகபட்சமாக … Read more

60 மணிநேரத்தில் 2 நாடுகள், 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி

ஜெர்மனி மற்றும் அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் மோடி, பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். குறிப்பாக உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்தாலும், சர்வதேச கரியமில வாயு வெளியீட்டில் இந்தியாவின் பங்கு வெறும் 5சதவிகிதம்தான் என்றார். இயற்கையுடன் இணைந்த வாழ்க்கைமுறையே இதற்கு காரணம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடியை அபுதாபி  ஆட்சியாளர் … Read more

19 பேருக்கு வாந்தி, மயக்கம்| Dinamalar

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே நிச்சயித்த மாப்பிள்ளை வீட்டில் சைவ விருந்து சாப்பிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் அரங்கநாதன், 28; கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்இருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகள் கமலா, 24; இவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.நேற்று மதியம் மாரங்கியூரில் உள்ள மாப்பிள்ளை வீட்டில், மணமகள் வீட்டாருக்கு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விருந்தில் பங்கேற்ற உத்திராபதி, … Read more

காலம் மாறிப்போச்சு : ரிலீசுக்கு முன்பே வெற்றி விழா

முன்பெல்லாம் ஒரு படம் 100 நாள் ஓடினால் விழா கொண்டாடுவார்கள். இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை வெளியான படம் திங்கட் கிழமை வரை தியேட்டரில் இருந்து விட்டாலே சக்சஸ் மீட் என்ற பெயரில் வெற்றி விழா கொண்டாடி விடுகிறார்கள். இப்போது இதையும் தாண்டி படம் வெளிவருதற்கு முன்பே வெற்றி விழா கொண்டாட தொடங்கியிருக்கிறார்கள். குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் சுருளிவேல் தயாரிப்பில் செல்வ அன்பரசன் இயக்கி உள்ள படம் பேய காணோம். இந்த படத்தில் மீரா … Read more

NSE-க்கு 7.. சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு 5.. செபி போட்ட தடாலடி அபராதம்..! #DarkFiber

இந்திய முதலீட்டுச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி பல மாதங்களாக விசாரித்து வரும் என்எஸ்ஈ கோ லொகேஷன் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளுக்கும், என்எஸ்ஈ அமைப்புக்கும் 7 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. என்எஸ்ஈ வழக்கு விசாரணை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் வேளையில் செபி-யின் உத்தரவு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. அரபிந்தோ பார்மாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள செபி.. ஏன்.. எதற்காக? Dark Fibre வழக்கு தேசிய பங்குச்சந்தை -யின் Dark … Read more