அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து அவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யக்கூடாது. மாணவர்கள்  நாட்டின் கண்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூறுகையில், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு … Read more

#BREAKING || டாஸ்மாக் பணியாளர்கள் 100% தடுப்பூசி கட்டாயம் – தமிழ்நாடு வாணிபக் கழகம் உத்தரவு.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் பணியாளர்களுக்கு 100% தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் … Read more

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் 2-வது நாளாக போலீஸ் விசாரணை!

அ.தி.மு.க ஆட்சியில் பவர் சென்டராக இருந்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகக் கடந்தாண்டு முதல் கூடுதல் விசாரணையை தொடங்கியது காவல்துறை. கொடநாடு பங்களா சசிகலா, விவேக் ஜெயராமன், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உட்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணன் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அவரிடம் … Read more

திருப்பூரில், வீட்டில் தனியாக இருந்த ரியல்-எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த ரியல் எஸ்டேட் புரோக்கரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த பாலசுப்பிரமணி என்ற அந்த நபர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். பெற்றோர் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல் பாலசுப்பிரமணியை கத்தியால் வெட்டி படுகொலை செய்து விட்டு, அவரது இருசக்கர வாகனத்துடன் தப்பியது. Source link

தமிழகத்தில் வணிக வாகனங்கள் தணிக்கை: ஒரு மாதத்தில் மட்டும் ரூ.12.19 கோடி அபராதம் வசூல்

சென்னை: வணிக வரித் துறை மூலம் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில் ரூ.12.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக வணிக வரித் துறையின் நுண்ணறிவு பிரிவு மூலம் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ள வாகனத் தணிக்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திடுவதில் வணிக வரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது. … Read more

'சிவசேனா தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை' – உத்தவ் தாக்கரே உருக்கமான பேச்சு

மும்பை: “எதிர்பாராத விதமாக அதிகாரத்துக்கு வந்தவன் நான். அதே பாணியில் இப்போதும் வெளியேறவும் செய்கிறேன்” என மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியாகும் முன்பாக, மகாராஷ்டிரா முதல்வர் மாநில மக்களுக்கு சமூக வலைதளம் உரையாற்றினார். தனது உரையில், “இந்த தருணத்தில், என்னை ஆதரித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சகாக்களுக்கு எனது நன்றியை … Read more

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோட்டாபய அனுப்பிய செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார். நேற்று இடம்பெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமெரிக்கா ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தார். 800,000 இற்கு மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதறம்காக இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்திருந்தார். … Read more

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே..

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு அதிருப்தி எம்.எல்.ஏ.கள் என்ன விரும்பினார்களோ அதனை கொடுத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல் அடுத்து அமைய இருக்கும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த சோனியா காந்தி, சரத் பவாருக்கு நன்றி – உத்தவ் தாக்கரே Source link

ஜேர்மனியில் நீதிமன்ற வாசலில் வெட்டப்பட்ட தலையுடன் உட்கார்ந்திருந்த நபர்: அதிரவைத்த ஒரு சம்பவம்

ஜேர்மனியில், நீதிமன்றம் ஒன்றின் வாசலில் வெட்டப்பட்ட மனிதத் தலை ஒன்றை வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்த ஒருவரை பொலிசார் கைது செய்தனர். ஜேர்மனியின் Bonn நகரில், மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று மாலை 5.40 மணியளவில் வந்த ஒரு நபர் தன் கையிலிருந்த ஒரு பொருளை நீதிமன்ற வாசலில் வைத்துவிட்டு சற்று தள்ளி அமர்ந்துகொண்டுள்ளார். அது ஒரு மனிதத் தலை! அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக பொலிசாரை அழைக்க, உடனடியாக அவரை கைது செய்தனர் பொலிசார். இதற்கிடையில், அவர் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்! சிவசேனா மனுமீது உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ்தாக்கரே அரசு நாளை (30ந்தேதி) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை கேட்டு சிவசேனா தரப்பில் உச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது இன்று காரசார விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. … Read more