பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடக்கம்

நெல்லூர்: பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுகளத்தில் இருந்து டிஎஸ்-இஓ என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

எல்இடி விளக்குகளுக்கு ஜிஎஸ்டி வரி 12-ல் இருந்து 18% ஆக உயர்வு: நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: எல்இடி விளக்குகளுக்கு ஜிஎஸ்டி வரி 12-ல் இருந்து 18% ஆக உயர்வு என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சூரிய சக்தியில் தண்ணீர் சுட வைக்கும் இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%லிருந்து 12%ஆக உயர்வு எனவும், கிரைண்டர், அரசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%லிருந்து 18%ஆக உயர்வு எனவும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகள் மீதான ஜிஎஸ்டி வரி 12%லிருந்து 18%ஆக உயர்வு  நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடைத்தெருவில் கலாட்டா செய்தவரை தட்டி கேட்ட காவலர் மீது கத்தியால் தாக்குதல்!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் மணிகண்டன். இவர் இன்று பணியில் இருக்கும் பொழுது அரித்துவாரமங்கலம் கடை தெருவில் பொதுமக்களிடம் ஒருவர் கத்தியை வைத்துக்கொண்டு கலாட்டா செய்து தொந்தரவு கொடுத்துள்ளார். கடைதெருவில் செல்பவர்கள் மீது கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமான வார்த்தைகளை சொல்லி தொல்லை தருவதாக காவல் நிலையத்திற்கு வந்து ஒருவர் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்று உடனடியாக அங்கு விரைந்த காவலர் மணிகண்டன் அங்கு கலாட்டா செய்து கொண்டிருந்த 25 வயது … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 11 ஆயிரத்து 793-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து … Read more

ஆட்டோ – மொபட் மோதல் இருவர் பலி: 7 பேர் காயம் – பண்ருட்டி அருகே கோர விபத்து

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஆட்டோ – மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர். 7 பெண்கள் படுகாயமடைந்தனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கட்டியாம்பாளையம், பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி புஷ்பா,45; கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த சிவகாமி,55; நிஷாந்தி,25; ரமணி,33; பாக்கியலட்சுமி,45; மலர்கொடி,60; செண்பகம்,45; சின்னபொண்ணு,55, ஆகிய 8 பேரும் ஆட்டோவில் அரசூர் சென்று, அங்கிருந்து மேல்மலையனுார் கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் 8 … Read more

ஜூலை 8ல் ஓடிடியில் வெளியாகும் கமலின் விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் விக்ரம். இந்த படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூலித்து கமல்ஹாசனுக்கு திரையுலகில் மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. இதையடுத்து பல படங்களில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தை வருகிற ஜூலை 8- தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்புகிறார்கள். இது குறித்த ஒரு புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாயகன் … Read more

இந்தியாவின் தங்க நகரம் எது தெரியுமா..?

பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய 4 இந்திய நகரங்கள், ஆசிய பசிபிக் நிலைத்தன்மை குறியீடு 2021ன் (Asia Pacific Sustainability Index 2021) படி, முதல் 20 நிலையான நகரங்களில் இடம் பெற்றுள்ளன. உலகளாவிய சொத்து ஆலோசகரான நைட் பிராங்கின் ( Knight Frank’s APAC Sustainably Led Cities Index) குறியீட்டின் படி, நகரமயமாக்கல் அழுத்தம், கால நிலை பிரச்சனை, கார்பன் உமிழ்வு மற்றும் அரசின் முயற்சிகள் என பலவற்றின் அடிப்படையில் இந்த … Read more

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள்

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு, 2022 ஜூன் 30 முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும். இதே வேலை ஏற்பாடுகள் யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதுடன், அந்த அலுவலகங்களும் இந்த நாட்களிலேயே சேவைகளை வழங்கும். அவசர விசாரணைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளினூடாக தொடர்பு … Read more

திருச்சி சிறப்பு முகாம் சித்திரவதை; அ.தி.மு.க வழியில் தி.மு.க: திருமுருகன் காந்தி புகார்

திருச்சி மத்திய சிறைச்சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் இதே சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் … Read more

10 ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும்… இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது.! 

வடகிழக்கு எல்லை ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்புப் பிரிவின் மூலம் அப்ரண்டிஸ் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த பதவிக்கு 5636 திறந்த நிலைகள் உள்ளன. வயது வரம்பு :  ஏப்ரல் 1, 2022 இன் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 15 ஆக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் 24 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. SC/ST விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் குறைக்கப்படலாம், மேலும் OBC விண்ணப்பதாரர்களுக்கு, அது குறைக்கப்படலாம். கல்வி : விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்வில் … Read more