உதய்பூர் கொலையில் 'கராச்சி'-எடப்பாடி-யின் 'by-law' -மீண்டும் cryptocurrency மோசடி|விகடன் ஹைலைட்ஸ்

உதய்பூர் படுகொலையில் கராச்சி தீவிரவாத இயக்கம்? கன்னையா லால் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர், பூத்மஹால் பகுதியில் தையல் கடை நடத்திவந்தவர் கன்ஹையா லால். அண்மையில், முகமது நபிகள் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு கன்ஹையா லால் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டும் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில், நேற்றைய … Read more

டெபாசிட் செய்யும் எந்திரத்திற்குள் பவுடர், தண்ணீரை ஊற்றிச் சென்ற விஷமி..

திருவள்ளூர் மாவட்டத்தில், ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்திற்குள் பவுடரையும், தண்ணீரையும் ஊற்றிச் சென்ற விஷமியை போலீசார் தேடி வருகின்றனர். திருவாலங்காட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் டெபாசிட் செய்யும் எந்திரம் திடீரென பழுதடைந்தது. ஊழியர்கள் அந்த எந்திரத்தை திறந்து பார்த்த போது உள்ளே தண்ணீரும், பவுடரும் இருந்துள்ளது. எடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காலை 10:30 மணியளவில் வந்த மர்ம நபர் ஒருவர் … Read more

இஸ்லாமியர்கள் நலனுக்கு எனக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக வழக்கு: என்ஐஏ, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் என்ஐஏ, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்காக உதவுவது உள்ளிட்ட நலப்பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி சென்னையில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையின்போது அதிகளவில் வசூலிக்கப்பட்டது. ரம்ஜான் முடிந்த பின்னரும் பணம் வசூலிக்கப்பட்டு சட்டவிரோத … Read more

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் – ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு சிவசேனா கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்களின் அதிருப்தி காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி வியாழன் அன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதமானது என அதனை எதிர்த்து சிவசேனா … Read more

மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவையில் நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா உறுப்பினர்கள் 39 பேர் தெரிவித்தனர். இதையடுத்து ஜூன் 30ஆம் நாள் சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்குக் கோரிப் பெரும்பான்மையை மெய்ப்பிக்கும்படி உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து … Read more

ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை: அதிகரிக்கும் எண்ணெய் விலை

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் மறுமலர்ச்சி தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைகள் உறுதியான முடிவுகளை வழங்காததை அடுத்து, எண்ணெய் விலைகள் புதன்கிழமை அதிகரித்தன. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக கடந்த 2020 ஆண்டு ஈராக்கில் உள்ள இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் நேரடி மோதல் உருவாகியது. மேலும் அதன் விளைவாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்ததை … Read more

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் போர்க்கொடி உயர்த்தினர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்கு அழைத்துச் சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கோரிக்கை குறித்து தன்னை நேரில் சந்தித்து … Read more

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் கைது

சென்னை: திருணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் இசையமைப்பாளர் சபேஷ் சாலமனை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

காத்மாண்டில் பானிபூரிக்கு தடை

காத்மாண்டு: நொறுக்கு தீனிகளில் மிக முக்கியமானது பானிபூரி. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் என்பது மிகையாகாது. சமீப காலமாக மாலை வேளைகளில் பானி பூரி கடைகளுக்கு மக்கள் படையெடுப்பது வழக்கமாக உள்ளது. சிறிய தள்ளுவண்டிகளில்கூட பலர் இந்த வியாபாரத்தை செய்கின்றனர். ஆங்காங்கே சிறிய இடங்களில் பானிப்பூரி கடை முளைத்துள்ளதை கண்கூடாக பார்ப்பதுண்டு.இந்நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி … Read more

வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் பாலியல் புகார் – சென்னை கானா பாடல் இளம் இசையமைப்பாளர் கைது

ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியே, காதலியை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சபேஷ் சாலமன் என்ற கானா பாடல் இசையமைப்பாளர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் பலமுறை தனியாக இருந்ததாகவும், பின்னர் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யூ-டியூப்பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும் சபேஷின் … Read more