ஜிஎஸ்டி கூட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்புகள்.. என்னவெல்லாம் விலை அதிகரிக்கும்?

ஜிஎஸ்டி கவுன்சிலி 47வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று சண்டீகரில் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவாக சில்லறை விற்பனை பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியினை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பணவீக்கத்தினால் பல பொருட்களின் விலையும் அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவானது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது. 6 மாதத்திற்கு பின்.. ஜிஎஸ்டி கூட்டம் இன்று துவக்கம்.. கவனிக்க வேண்டியது என்ன..? எதற்கெல்லாம் … Read more

அமெரிக்க திறைசேரி , இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன சந்திப்பு

ஆசியாவிற்கான திறைசேரி துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையிலான அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பிரதிநிதிகளை, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன 2022 ஜூன் 28 செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வை நோக்கி பங்களிக்கின்ற இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான மற்றும் பன்முகத்தன்மை … Read more

விளாடிமிர் புடின் பெண்ணாக இருந்திருந்தால் போரிட்டிருக்க மாட்டார்: பிரிட்டன் PM போரிஸ் ஜான்சன்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக ஐரோப்பாவும் கடும் சிக்கலில் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், அரசியல் மற்றும் பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், வெறித்தனமான மற்றும் கட்டாயப் போரைத் தொடங்கியிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார். ஜி-7 உச்சிமாநாட்டின் முடிவில் ஜெர்மனியில் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய-உக்ரைன் போருக்கு … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..!

மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, முகப்பேரு பகுதியில் உள்ள பள்ளியில் அங்குள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் வேதியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக  அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பெயரில் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் … Read more

ஒ.பி.எஸ் தான் தலைமை… இ.பி.எஸ் விட்டுக் கொடுக்கணும்… ஜூனியர் எம்.ஜி.ஆர் பேட்டி

அதிமுகவில கடந்த 2 வாரங்களாக ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை என்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே ஒற்றை தலைமை அவசியம் என்றால் அதில் ஒபிஎஸ்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று ஜூனியர் எம்.ஜி.ஆர். என அழைக்கப்படும் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சியின் முக்கிய … Read more

மருத்துவமனையில் செலுத்தப்பட்ட ஊசி, உடல்நிலை மோசமான 14 குழந்தைகள்; விசாரணையில் தெரியவந்த காரணம்!

கர்நாடகா மாநிலத்தில் சளி மற்றும் காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டிபயாடிக் ஊசி போடப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. Injection (Representational Image) கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜூன் 26 ஞாயிற்றுக்கிழமை அன்று காய்ச்சல் மற்றும் சளி காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஆன்டிபயாடிக் ஊசிகள் செலுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10 மாதம் முதல் 12 வயதுடைய, சளி மற்றும் காய்ச்சலால் … Read more

கோடநாடு வழக்கு விவகாரம்: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை

கோவை: கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இக்கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை முதலில் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான … Read more

தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் வர்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இது வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 63,000 தொடக்க … Read more

சிலி | ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000-க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளம்; தலைமறைவான விவகாரம்

சாண்டியாகோ: சிலி நாட்டில் ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000-க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளமாக கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக தெரிவித்த ஊழியர் தலைமறைவாகி உள்ளார். அதனால், இப்போது அந்த நிறுவனம் சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுக முடிவு செய்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று சிலி. அந்த நாட்டில் இயங்கி வரும் சியல் (Cial) என்ற நிறுவனத்தில்தான் இது நடந்துள்ளது. கடந்த மே மாதம் சம்பந்தப்பட்ட ஊழியரின் வங்கிக் கணக்கில் … Read more

சீனாவில் கடும் வெப்ப அலை – திறந்தவெளி நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

சீனாவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால், திறந்தவெளி நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதுவரை இல்லாத வகையில் அங்கு 44 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருப்பதால், மின்சார பயன்பாடும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெப்பம் நிலவி வரும் நிலையில் நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. வெப்ப அலை அடுத்த 2 நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source link