கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து.. வங்கி சுவரை இடித்து தள்ளி விபத்து.. சிசிடிவி காட்சிகள்..

கேரளாவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து வங்கியின் மதில் சுவரை இடித்து தள்ளியது. கக்கட் (Kakkad) பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த பேருந்து அவ்வழியாக நடந்து சென்ற பெண் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் மீது மோதி விட்டு கிராம வங்கியின் சுவரை இடித்து தள்ளியது.  சாலையில் சென்ற பெண்மணியும், பேருந்து பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மழையில் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து … Read more

இலங்கை கொடுத்த பதிலடி! வீழ்ந்த அவுஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகள்

காலே டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளை இலங்கை கைப்பற்றியது. காலேவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக திக்வெல்ல 58 ஓட்டங்கள் விளாசினார். அதனைத் தொடந்து அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடி வீரரான டேவிட் வார்னரின் விக்கெட்டை ரமேஷ் மெண்டிஸ் வீழ்த்தினார். இதனால் 25 ஓட்டங்களில் அவர் வெளியேறினார். பின்னர் வந்த லபுசாக்னே 13 ஓட்டங்களில் இருந்தபோது ரமேஷ் மெண்டிஸ் … Read more

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம்! டெல்லி காவல்துறை தகவல்

டெல்லி: நூபுர்சர்மா விவகாரத்தை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு சென்று, சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் வங்கி கணக்கில் முறைகேடாக ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போலி செய்திகளை கண்டறிந்து, அதன் பின் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் வேலையை  செய்வது வருவதாக ’ஆல்ட் நியூஸ்’ நிறுவனம்  கூறி வருகிறது. அதுபோல பல செய்திகளின் உண்மைத்தன்மையையும் வெளியிட்டு வந்தது. . இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர். இவர் நூபுர் சர்மாவின் … Read more

மதுரை மேலவளவில் சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 2 நாள் டாஸ்க்மக் கடைகள் மூடல்

மதுரை: மதுரை, மேலூர் மேலவளவு காவல்நிலைய இல்லைக்குட்பட்ட 12 டாஸ்க்மக் கடையை நாளை, நாளை மறுநாள் மூட மாவட்ட ஆட்சியர் அணையிட்டுள்ளார். சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் வகையில் டாஸ்க்மக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா கொறடா சுனில் பிரபு தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் மீது இன்னும் தீர்வு காணப்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் தகுதிநீக்க நடவடிக்கைக்கு அனுமதி தேவை என சிவசேனா தரப்பு வாதிட்டு வருகிறது.

தன்பாலின சேர்க்கைக்கு மறுத்த நண்பனை கொலை செய்த இளைஞரின் ஆயுள் தண்டனை ரத்து

தன் பாலின சேர்க்கைக்கு மறுத்த நண்பனை குத்திக் கொன்றதாக வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமரன் என்ற வாலிபர், தனது நண்பர் தினேஷை சந்திக்கச் செல்வதாகக் கூறி கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாததால், சதீஷ்குமரனின் தந்தை சத்தியமூர்த்தி, நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி … Read more

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து வெளியான அப்டேட்

நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி வருவதாக புகைப்படத்துடன் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவரான டி. ராஜேந்தர், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் … Read more

மகன் உட்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள்| Dinamalar

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்த மகன் உட்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மட்டிகைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் வெங்கடேசன், 41; அதே ஊரைச்சேர்ந்தவர் கண்ணுபிள்ளை மனைவி தங்கம். இவர், 2018ம் ஆண்டு வெங்கடேசனிடம் வீடு கட்டுவதற்காக பண உதவி கேட்டுள்ளார். தங்கம் சொத்து பத்திரம் கொடுத்தார். அதனை வெங்கடேசன் தெரிந்த நபரிடம், அடமானம் வைத்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கி தங்கத்திடம் … Read more

ஷம்ஷேராவில் 1800ல் நடக்கும் கதை

சஞ்சு படத்திற்கு பிறகு 4 வருட இடைவெளிக்கு பிறகு ரன்பீர் கபூர் நடித்திருக்கும் படம் ஷம்ஷேரா. இதில் ரன்பீர் கபூருடன் சஞ்சய்தத், வாணி கபூர், அஷூதோஸ் ராணா, ரோனித் ராய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கரன் மல்ஹோத்ரா இயக்குகிறார். யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பல் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான, ஜி ஹுசூர் இன்று வெளியாகி உள்ளது. இதனுடன் படத்தின் கதை பற்றிய விபரங்களையும் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: காஸா … Read more

அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!

சீனாவின் டிக்டாக் செயலி மக்களின் தனிநபர் தரவுகளைத் திருடுகிறது, மக்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்று இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவிலும் இதேபோன்ற பிரச்சனை இருந்தாலும் பல மாற்றங்களைச் செய்து தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் டிக்டாக் நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் இருந்து கசிந்த சில தரவுகள் பூதாகரமாக வெடித்து டிக்டாக்-ன் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பாடிசோடா.. கடைசில மண்ட மேல இருந்த கொண்டைய மறந்த ரஷ்யா..! டிக்டாக் தடை அமெரிக்காவில் ஐபோன் மற்றும் … Read more