ஹோம் லோனில் இவ்வளவு விஷயம் இருக்கா.. இது தெரியமாக கடன் வாங்க கூடாது..!

வீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் வாழ் நாள் கனவாகவே இருக்கும். குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு தெரியும் சொந்த வீட்டின் அருமை. வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் வந்து நிற்கும் முதல் தடையே பணம் தான். வீடு கட்ட நினைப்போரும், கட்டிக் கொண்டிருப்போரும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு கட்டுவதில்லை. ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..! பெரும்பாலும் கடன் வாங்கியே கட்டுகின்றனர். … Read more

மட்டக்களப்பில் சிறுபோக வேளாண்மை அறுவடை விழா

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக வேளாண்மை அறுவடை விழா இன்று (30) காலை 10 மணிக்கு கிரான் தவணை கண்டத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. வாகனேரி திட்ட முகாமைத்துவக்குழுவின் தலைவர் சி.புஸ்பாகரன் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்துகொண்டார். மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்துகொண்னர். ஆலய … Read more

#திருப்பூர் || ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!

ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபராகவும், பைனான்ஸியராகவும் இருந்து வந்தார். இவரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது பெற்றோர் கோவிலுக்கு சென்றதால் பாலசுப்பிரமணி தனியாக இருந்துள்ளார். நள்ளிரவு வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் அவரை பாலசுப்பிரமணியை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். … Read more

கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பீர்; உணவு பஞ்சம் குறித்து ஐ.நா எச்சரிக்கை… உலகச் செய்திகள்

Global food shortage crisis, Singapore sewage water used beer today world news: இன்று உலக நாடுகளில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். முதல் பெண் கறுப்பின நீதிபதி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண்மணியாக, உச்ச நீதிமன்றத்தில் கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்றார். 51 வயதான ஜாக்சன் நீதிமன்றத்தின் 116 வது நீதிபதி ஆவார். நீதிபதி ஸ்டீபன் பிரேயரின் ஓய்வு நண்பகல் முதல் அமலுக்கு வந்த நிலையில், அவரது இடத்தில் … Read more

டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால்தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? : அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? எனத் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது. காடுகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற 5 கோடியே 36 இலட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ரசாயன முறைப்படி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்நிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் அழிவதை ஒப்புக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர வேறு என்ன செய்துள்ளது? என நீதிபதிகள் வினவினர். அந்நிய மரங்களால் … Read more

திருப்பூர் மசூதி விவகாரம் | “ஐகோர்ட் உத்தரவை மீறிய திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுங்கள்” – தமிழக பாஜக

சென்னை: திருப்பூர் மசூதி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட திருப்பூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பூரில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த மசூதியை மூட வேண்டும்; அங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில், வருவாய்த் துறை … Read more

இலங்கையில் நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 22 சதவீதம் உயர்வு.. குறைந்தபட்ச கட்டணம் ரூ.32ல் இருந்து ரூ.40ஆக அதிகரிப்பு..!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பேருந்து பயணக் கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளதால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன் படி, குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.  Source link

வெட்டப்பட்ட மனிதத் தலையுடன் ஜேர்மன் நீதிமன்ற வாசலில் உட்கார்ந்திருந்த நபர்… வழக்கில் எதிர்பாராத திருப்பம்

ஜேர்மன் நீதிமன்றம் ஒன்றின் வாசலில் வெட்டப்பட்ட மனிதத் தலை ஒன்றுடன் ஒருவர் உட்கார்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜேர்மனியின் Bonn நகரில், மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில் வந்த ஒரு நபர், மனிதத் தலை ஒன்றை நீதிமன்ற வாசலில் வைத்துவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்துகொண்டார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக பொலிசாரை அழைக்க, உடனடியாக அவரை கைது செய்தனர் பொலிசார். இத்ற்கிடையில், … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18ம் தேதி துவக்கம்; ஆகஸ்ட் 12 வரை நடக்கும்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடத்தப்படுகிறது. இதில், பாஜ கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி முடியும் என்று அறிவிக்கப்பட்டு … Read more

’தேர்தலை முதலில் இருந்து நடத்துங்க’ – புதிய வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சூரிய மூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ”அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, முறையாக தேர்தல் நடைமுறைகளை கையாளாமல் … Read more