சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை..
மத்திய அரசின் உத்தரவுகளை வரும் ஜூலை 4ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு பலமுறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. Source link