கொலம்பியா சிறை தீ விபத்தில் 51 பேர் பலி; ஐரோப்பாவில் படைகளை குவிக்கும் அமெரிக்கா… உலகச் செய்திகள்

Colombia jail fire accident, Iran, Argentina want to be part in BRICS today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். சிறை தீ விபத்தில் 51 பேர் பலி தென்மேற்கு கொலம்பியாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். தேசிய சிறைச்சாலை அமைப்பின் இயக்குனர் டிட்டோ காஸ்டெல்லானோஸ், ரேடியோ கராகோலிடம், இறந்தவர்கள் … Read more

திருவாரூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம்..!

தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்தாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் நெடுமாறன். இவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் டயாலிசிஸ் சிகிச்சையும், பாம்பு கடி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று அதிகாலை மூச்சு திணறால் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த அவரின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களை வைத்து தவறான சிகிச்சை அளித்ததால் நெடுமாறன் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து காவல்துறையினர் அவர்களை … Read more

உதய்பூர் படுகொலை: `சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருக்காதீர்' – நெதர்லாந்து எம்.பி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் டெய்லர் கன்ஹையா லால் என்பவரை, கவுஸ் முகமது, ரியாஸ் முகமது ஆகிய இளைஞர்கள் இருவர் நேற்று தலை துண்டித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்றிரவே போலீஸார் கொலையாளர்களை கைதுசெய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தேசிய முகாமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. நுபுர் ஷர்மா இந்த … Read more

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைவில் மண் பரிசோதனை தொடங்கும் – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரைவில் மண் பரிசோதனை தொடங்கும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கல்லூரி கனவு எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறிய ரக ராக்கெட் ஏவுதளத்திற்காக 2700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.   Source link

மொத்தப் பயணங்களில் 62%, தினசரி செலவு ரூ.5.98 கோடி: மகளிருக்கான இலவச பயணம் – ஒரு பார்வை

சென்னை: தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மொத்த பயணங்களில் 62 சதவீத பயணங்களை கட்டணமில்லா திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்காக தினசரி ரூ.5.98 கோடி செலவாகிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், ‘நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்’ என்ற திட்டம் பெரிய வரவேற்பை பெற்றது. இது தொடர்பான உத்தரவில், “தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் … Read more

“புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது” – போரிஸ் ஜான்சன்

பெர்லின்: “புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது” என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் குறித்து செவ்வாய்க்கிழமை அன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில், “ரஷ்ய அதிபர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால். அவர் அப்படி இல்லை… எனினும் அவர் பெண்ணாக இருந்திருந்தால், பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான வன்முறையை நிகழ்த்தி இருக்க மாட்டார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது நச்சு மிக்க ஆண்மைக்கான உதாரணம். மக்கள் … Read more

'எங்களுடன் 50 எம்எல்ஏக்கள்.. பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' – ஏக்நாத் ஷிண்டே அதிரடி!

தங்களுடன் 50 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்றும், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் … Read more

வெள்ளத்தில் சிக்கித் தவித்த விலங்குகளை பத்திரமாக மீட்ட தன்னார்வ குழுவினர்.!

துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த விலங்குகளை தன்னார்வ குழுவினர் பத்திரமாக மீட்டனர். அந்நாட்டின் ஆறு மாகாணங்களில் கனமழை பெய்த்தால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், வடக்கு மாகாணமான டஸ்ஸில் தன்னார்வ குழுவினர் இணைந்து படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த கால்நடைகளை  மீட்டு வருகின்றனர். Source link

“10 ரூவா சம்பளத்துக்கு ஆசைப்பட்டு என் வாழ்க்கையே திசைமாறிடுச்சு!" – நடிகை லீலாவதியின் பர்சனல்ஸ்

சினிமா பிரபலங்களின் வாழ்க்கையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. அதுபோல கன்னட சினிமாவில் நடிப்புக்கும் பரபரப்புக்கும் பெயர் போனவர் லீலாவதி. வீட்டு வேலை செய்து கொண்டிருந்தவர், சினிமாவில் நாயகியாகப் புகழ் பெற்றது முதல், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடனான திருமண பந்தம் வரை லீலாவதியின் வாழ்க்கையில் அரங்கேறிய அதிரடி நிகழ்வுகள் ஏராளம். விவசாய வேலையில் நடிகை லீலாவதி… கன்னட சினிமாவில் சீனியர் நடிகையான இவர், `அவள் ஒரு தொடர்கதை’, `அவர்கள்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் தன் … Read more

மீனாவை எப்போதும் சிரித்த முகத்துடன் பார்த்துவிட்டு.. இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை: கே.எஸ்.ரவிக்குமார் வேதனை

வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை மீனாவின் நிலை குறித்து வேதனை தெரிவித்தார். மாரடைப்பால் உயிரிழந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிரித்த முகத்துடன் பார்த்த மீனாவை இவ்வாறு அழுவதை பார்க்க முடியவில்லை என இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். ஊடகத்திடம் பேசிய அவர், ‘மிகவும் கடினமான ஒரு சூழலில் மீனாவை பார்ப்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எப்பவுமே சிரித்துக் கொண்டே இருந்த … Read more