அதிமுக பொதுக்குழு விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதனும் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. முன்னதாக அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்ததால், அதை ஏற்க மறுத்த ஓபிஎஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தனக்கு சாதகமான … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகில்?

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் ரோஹித் ஷர்மா விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் ஷர்மா இடம்பெறாத நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி

பாட்னா: பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்து உள்ளனர்’  என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு … Read more

பள்ளி வாகனங்களில் கேமிராக்கள் சென்சார் பொருத்தும் சட்டதிருத்தம் – தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், சென்சார் பொருத்துவது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவருவதற்கு பொதுமக்கள் கருத்தை கேட்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் சென்சார் கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளி வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய … Read more

உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் இன்றும் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. பல பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. விலை உயரப்போகும் … Read more

பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ் – பிரபல நடிகர் தான் காரணம்?

‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பெருமான் ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். அதுவும் அவரின் தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார். இந்தப் படத்தை … Read more

முடிவை தள்ளி வைத்தது ஜிஎஸ்டி கவுன்சில்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சண்டிகர்: ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், லாட்டரி, குதிரை பந்தயம் போன்றவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் 2 நாட்களாக நடந்து வந்தது. கூட்டம் நிறைவடைந்த பின்னர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: சூதாட்டம், லாட்டரி, ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவு … Read more

பிரித்விராஜின் கடுவா தள்ளிப்போனதன் பின்னணி இதுதான்

பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள கடுவா திரைப்படம் ஜூன் 30ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திடீரென இந்த படம் ஜூலை 7ஆம் தேதி ரிலீசாகும் என தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. சில எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இந்த படம் ஒரு வாரம் தள்ளி வைக்கப்படுவதால் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என பிரித்விராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார். … Read more

பாகிஸ்தான் திவாலாகிறதா.. கொடூரமான பணவீக்கம், கரன்சி வீழ்ச்சி தான் காரணமா?

பாகிஸ்தான் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை, மோசமான பணவீக்கம், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் கரன்சி மதிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், 6 பில்லியன் டாலர் நிதி திரட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. எனினும் இதுவரையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. NSE-க்கு 7.. சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு 5.. செபி … Read more

மண்பிட்டி பாரம்பரிய மீன்பிடி இறங்கு துறைக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

பள்ளிக்குடா, மண்பிட்டி பாரம்பரிய மீன்பிடி இறங்கு துறைக்கு இன்று (29) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ பிரதேச கடற்றொழிலாளர்களினால் உருவாக்கப்பட்ட ‘தேவா கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இதன்போது பிரதேச கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கலந்துரையாடலிலும் அமைச்சர் ஈடுபட்டார். தற்போது நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில்இ கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் கடற்றொழில் அமைச்சர் இதன் போது அவர்களுக்கு … Read more