சூட்கேஸில் வைத்து பாம்பு, ஆமைகள் கடத்த முயற்சி! – பாங்காக் விமான நிலையத்தில் கைதான இந்தியப் பெண்கள்

தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில், 109 உயிருள்ள விலங்குகளைச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற இந்தியப் பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த திங்கள்கிழமை தாய்லாந்திலிருந்து சென்னை செல்வதற்காக, நித்ய ராஜா, ஜாகியா சுல்தானா இப்ராஹிம் ஆகிய இரண்டு இந்தியப் பெண்கள் பாங்காக்கிலிருக்கும் சுவர்ணபூமி விமான நிலையம் வந்திருக்கின்றனர். அப்போது விமான நிலையத்தில் அதிகாரிகள், அவர்களின் சூட்கேஸ்களை பரிசோதனை செய்ததில், 109 உயிருள்ள விலங்குகளை அவர்கள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்றது தெரியவந்திருக்கிறது. ஆமை அதையடுத்து தாய்லாந்து அதிகாரிகள், 2019 வனவிலங்கு … Read more

தீஸ்தா சீதல்வாட், முகமது ஜூபைர் கைது | மத்திய அரசு நிகழ்த்திய அரசப்பயங்கரவாதம்: சீமான்

சென்னை:“சமூகச்செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் , பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகளுக்கெதிராக நாடு முழுவதுமுள்ள ஜனநாயகச்சக்திகள் ஒன்றுதிரண்டு, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அறிவிக்கப்படாத அவசரநிலையை முறியடிக்கப் போராட்டக்களத்துக்கு வர வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். குஜராத் மதவெறிப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் , பாஜகவின் அவதூறுப் பரப்புரைகளைத் தோலுரித்து வரும் பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் … Read more

இலங்கை – இந்தியா இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து – அமைச்சர் குட் நியூஸ்!

இந்தியா – இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள், மருந்துகள், உணவுப் பொருட்கள், உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் திண்டாடுகிறார்கள். மேலும், விலைவாசி உயர்வு அவர்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், இலங்கை மீன்வளத் துறை அமைச்சரும், தமிழர் கட்சி ஒன்றின் தலைவருமான … Read more

Samsung Galaxy F13 சிறப்பான அம்சங்களுடன்; 11K விலைக்கு கீழான சூப்பர் ஸ்மார்ட்போனாக வலம்வருகிறது… கூடுதல் தகவல்களை அறியவும்!

தற்கால GenZ தலைமுறையினரையும், பல ஆண்டுகளாக போன்களை பயன்படுத்தி வரும் தலைமுறையையும் ஈர்க்கும் தயாரிப்புகளை சாம்சங் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் நிறுவனம் Galaxy F13 எனும் புதிய ஸ்மார்ட்போன் மூலம் மக்களை மகிழ்விக்க முடிவெடுத்துள்ளது. பயனர்களை மகிழ்ச்சி கடலில் நீந்த விடுவதே சாம்சங் நிறுவனத்தின் உணர்வாக உள்ளது. இந்த சூழலில் Samsung Galaxy F13 பட்ஜெட் தொடர் போன்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தவுள்ளது. நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன் கண்களைக் கவரும் சாதனமாக இருக்கிறது. Galaxy F-சீரிஸின் பாரம்பரியத்தை … Read more

8 வயது சிறுவன் விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டதில் பெண் குழந்தை பலி..

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 8 வயது சிறுவன் துப்பாக்கியால் விளையாட்டாக சுட்டதில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ரோடரிக் ராண்டால் (Roderick Randall) தனது மகன், பெண் தோழி, பெண் தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். ராண்டால் வெளியே சென்ற போது அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்த அவரது மகன் விளையாட்டாக சுட்டுள்ளான். அவரது பெண் தோழியின் ஒரு வயது பெண் குழந்தையின் உடலை துளைத்து வெளியே வந்த … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தங்களுக்கு கவலையில்லை – ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தங்களிடம் உள்ளதாகவும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் முகாமிட்டுள்ள அவர், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் நாளை மும்பை செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.  Source link

பாடும் வானம்பாடி: `டிஸ்கோ' என்ற வார்த்தை அறிமுகம்; நடனத்தால் அசத்திய நாகேஷ் மகன் ஆனந்த் பாபு

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘பாடும் வானம்பாடி’. இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids பிப்ரவரி 1985-ல் வெளியான ‘பாடும் வானம்பாடி’ ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். இந்தியில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற ‘டிஸ்கோ டான்ஸரின்’ தமிழ் ரீமேக் இது. ஆனந்த் பாபு ஹீரோவாக நடித்த இந்தத் திரைப்படம் … Read more

கணவரை கட்டி அணைத்து பிரியா விடை கொடுத்த நடிகை மீனா! நேரலை வீடியோ காட்சிகள்

பிரபல நடிகை மீனா தன் கணவரை கட்டியணைத்து இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு அங்கிருந்தவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். வித்யாசாகர் மரணம் நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். … Read more

உலகளவில் 55.05 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 50.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 6.72 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனா பாதிப்பால் 1,214 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 52.61 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.79 ஆக சரிவு

சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.79 ஆக சரிவந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.