ஜனாதிபதி தேர்தல் வாக்கு சேகரிக்க யஷ்வந்த் சின்கா கேரளா வருகை; மு.க.ஸ்டாலினுடன் நாளை சந்திப்பு

திருவனந்தபுரம்: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா வாக்கு சேகரிப்பதற்காக திருவனந்தபுரம் வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். 2 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று முதல் தென் … Read more

‘இந்தியாவில் மட்டும் இல்ல’… வெளிநாடுகளையும் மிரள வைக்கும் ‘விக்ரம்’

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இந்தியாவைத் தாண்டி, வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் இழப்பை சந்தித்த கோலிவுட் திரையுலகத்தில், அடுத்து அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களாக வெளியாகி வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’, நெல்சனின் ‘டாக்டர்’, விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சிபி சக்ரவர்த்தியின் ‘டான்’ ஆகியப் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றன. இதேபோல் … Read more

ஐ.நா., அதிகாரி கருத்துக்கு இந்தியா பதிலடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குஜராத் கலவர வழக்கில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த குற்றச்சாட்டின் கீழ், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா., தெரிவித்த கருத்துகள் தேவையற்றது எனவும், இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது போல் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. குஜராத்தில் கலவரத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரி கொல்லப்பட்டார்.இதில், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, … Read more

சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஆமீர்கான் ஆகியோருக்கு அடுத்தடுத்து தன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளார் 'ஆர்ஆர்ஆர்' நடிகரான ராம் சரண். சல்மான்கான் தற்போது தன்னுடைய 'கபி ஈத், கபி தீவாளி' ஹிந்திப் படத்திற்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார். அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் ராம் சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களை ராம்சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர். இது மூன்று … Read more

இந்திய முதலீட்டுக்கு ஆப்பு வைத்த மொரிஷியஸ்.. கடைசியில் இதுவும் போச்சா..?!

கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு சரிவாலும் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில் இந்திய வர்த்தகச் சந்தை தவித்து வரும் நிலையில், புதிதாக முதலீட்டைப் பெறுவதற்குத் தற்போது பிரச்சனை உருவாகியுள்ளது. இதேவேளையில் மொரிஷியஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Gold price: செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு? இந்திய சந்தை இந்திய பங்குச்சந்தை முதல் ஸ்டார்ட்அப் சந்தை வரையில் அன்னிய முதலீடுகளின் ஆதிக்கம் முதலீடுகள் மிகவும் அதிகம் … Read more

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

30000 வயது மாமூத் கண்டுபிடிப்பு: கனடாவில் உறைந்த உயிரினம்

வட அமெரிக்காவில் மம்மி ஒன்று அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாமூத் என்ற விலங்கினத்தின் குட்டியின் மம்மி ஆகும்.   ட்ரொண்டேக் ஹ்வாச்சின் முதியவர்களால் நன் சோ கா என்று பெயரிடப்பட்டது. கனடிய தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு உறைந்த மாமூத் குட்டி ஒன்றின் மம்மியின் (mummified baby woolly mammoth)  எச்சங்களை க்ளோண்டிக் தங்க வயல்களில் கண்டுபிடித்துள்ளனர். யூகோன் அரசாங்கம் மற்றும் Tr’ondek Hwech’in First Nation வெளியிட்டுள்ள செய்திகளின்படி, சுரங்கத் தொழிலாளர்கள் … Read more

வங்கியை விட அதிக வருமானம்: போஸ்ட் ஆபீஸில் இந்த 3 திட்டங்களை பாருங்க!

Post office schemes Tamil News: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தவணைகளில் ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் குறுகிய கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில், வங்கி நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் தபால் அலுவலக திட்டங்களை விட குறைவாக உள்ளது. அவ்வகையில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) போன்ற … Read more

மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லையா? அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

சென்னை மயிலாப்பூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது அவரிடம் மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை.  அவருக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு குணமான நிலையில், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பர் மாதம் மருத்துவமனையில் சேர்ந்து ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அப்போது அவரது இருதயம், … Read more

புதிய கௌரவம்.. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் நடிகர் சூர்யா தேர்வு !!

ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார்.  அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 … Read more