ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே – லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிசும் ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் கோஷ்யாரியிடம் உரிமை கோரினர். ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் ஆளுநர் கோஷியாரி. தங்களுக்கு தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். … Read more

பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம்

பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது கடுவா திரைப்படம். இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன், கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்… இதற்கு முன்னதாக தான் இயக்கிய லூசிபர் படத்தின் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிற்கு விவேக் ஓபராயை அழைத்து வந்து வில்லனாக்கியவர் பிரித்விராஜ் தான். வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் விவேக் … Read more

பெண்ணை கடத்திய கிளர்ச்சியாளர்கள் நர மாமிசம் சாப்பிட வைத்து சித்ரவதை| Dinamalar

நியூயார்க்:’காங்கோ நாட்டில் பெண்ணை கடத்திய கிளர்ச்சியாளர்கள், அவரை பலாத்காரம் செய்து, நர மாமிசம் சாப்பிட வைத்து சித்ரவதை செய்துள்ளனர்’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பெண் உரிமை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ, உள்நாட்டு போரால் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நாட்டின் நிலைமை குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மாதந்தோறும் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், சர்வதேச பெண்கள் உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜூலினா … Read more

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி ஓய்வு பெறுகிறார்

பெங்களூரு: அலோக் ஆராதே நியமனம் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் ரிதுராஜ் அவஸ்தி. இவர், நாளை(சனிக்கிழமை) ஓய்வு பெற உள்ளார். இதையடு்த்து, கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அலோக் ஆராதேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின்பேரில், கர்நாடக ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அலோக் ஆராதேவை மத்திய அரசு நியமித்திருக்கிறது. … Read more

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்

திண்டுக்கல், 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது மழை காரணமாக ஆட்டநேரம் … Read more

நேட்டோ நாடுகள் மீது ரஷியா, சீனா குற்றச்சாட்டு

மாட்ரிட், நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் நேற்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. இதில் சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற அச்சுறுத்தல்களால் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று நேட்டோ நாடுகள் எச்சரிக்கையை வெளியிட்டது. நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனையடுத்து, நேட்டோ அமைப்பில் … Read more

என்ன இப்பாடியாகிபோச்சு.. இதுவும் நல்லதுக்கு தான்.. தங்கம் விலையால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!

கொரோனா வந்தால் என்ன? ரெசசன் வந்தால் என்ன? நாங்கள் வாங்குவதை வாங்கிக் கொண்டு தான் இருப்போம் என தங்கத்தினை வாங்கி வரும் மக்கள் மத்தியில், விலை குறைந்தால் இன்னும் ஆர்வம் அதிகரிக்கலாம். எனினும் சமீப மாதங்களாக தங்கம் விலையானது பெரியளவில் அதிகரிக்கவும் செய்யாமல், குறையவும் செய்யாமல் ரேஞ்ச் பவுண்டாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் இன்றைய நிலவரம் என்ன? தங்கம் விலை கூடுமா? குறையுமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? Gold price: செம சர்பிரைஸ் … Read more

கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமனம்

கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ விடமிருந்து ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று (30) பெற்றுக்கொண் டார். ஆளுநரின் பதவிக்காலம் இன்று முடிவிற்கு வரவிருந்த நிலையில், ஜனாதிபதியினால் கலாநிதி நந்தலால் வீரசிங்க 6 வருடங்களுக்கு மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க.,வால் எதுவும் செய்ய முடியவில்லை – யஷ்வந்த் சின்ஹா

Yashwant Sinha meets DMK ally says BJP won’t do anything in Tamilnadu: நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம், மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி என எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் முடியவுள்ள நிலையில், ஜூலை 18 ஆம் தேதி குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக … Read more

கானா இசையமைப்பாளர் மீது இளம்பெண் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்..!

ஆபாச படத்தை வெளியிட்டுவிடுவதாக மிரட்டிய கானா பாடல் இசையமைப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கானா பாடல் இசையமைப்பாளர் சபேஷ் சால்மன் என்பவர் தன்னை காதலித்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக தெரிகிறது. அது பற்றி கேட்டபோது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக மிரட்டுவதாக தெரிவித்தார். இதற்கு அவரது தந்தை செல்வகுமாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில், அவர் அந்த பெண்ணை மிரட்டும் ஆடியோக்களும் இணையத்தில் வைரலானது. … Read more