உதய்பூர்: “உயிருக்கு ஆபத்து… காப்பாற்றுங்கள்!" – 5 நாள்களுக்கு முன்பே போலீஸை நாடிய கொலையானவர்

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து அண்மையில், பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு ராஜஸ்தான், மாநிலம் உதய்பூரைச் கன்ஹையா லால் என்ற டெய்லர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்றைய தினம் கன்ஹையா லாலின் கடைக்கு சென்ற இருவர் அவரின் தலையை துண்டித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட கொலைகாரர்கள் டெய்லரின் தலையை அரிவாளால் வெட்டியதோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர். இதையடுத்து, … Read more

'திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டுள்ள நகரம், இந்த திருப்பத்தூர் நகரம். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது எனவும், சோழ, விஜயநகர, ஹொய்சாள … Read more

கரோனா தடுப்பில் தீவிர நடவடிக்கை தேவை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் பலவகையானப் பண்டிகைகள் மற்றும் யாத்திரைகள் தொடங்கவுள்ள நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தொற்று கணிசமான அளவு குறைந்திருந்தது. தற்போது ஒருசில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று … Read more

OH MY GOD..! பல் தேய்க்காமல் முத்தம் – மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பற்களை தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு, தீபிகா என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரியும் அவினாஷ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க, பாலக்காட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, அவினாஷ் தூங்கி எழுந்ததும், தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்துள்ளார். … Read more

கொழும்பில் பிரதான வீதியொன்றை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! வீதித் தடை மீது ஏறி நின்றவர்கள் கைது

கொழும்பு – செத்தம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இந்த நிலையில், செத்தம் வீதியை மறித்து, வீதித் தடையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நால்வர் கைது  இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  தற்போது குறித்த பகுதியில் சிறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  Source … Read more

புதுச்சேரி முதலமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ்..

புதுச்சேரியில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பணி பாதுகாப்பு வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 23-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள், போக்குவரத்துத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென உறுதியளிக்கப்பட்டது. Source link

இனிமேலாவது இந்த தவறை செய்யாதீங்க! உருக்கமாக பேசிய மன்சூர் அலிகான்

இளவயதில் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, இனிமேலாவது துரித உணவுகள் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணமடைந்தது ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தாலும், நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார் வித்யாசாகர். புறாக்களின் எச்சம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசித்து வந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு … Read more

உதய்பூர் படுகொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: உதய்பூர் படுகொலைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “உதய்பூரின் கொடூரச் சம்பத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மதத்தின் பெயரால் வன்முறையை ஏற்க முடியாது. இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து வெறுப்புணர்வை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வுகளின் முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு

டெல்லி: அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு செய்துள்ளார். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக  நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு செய்து இருக்கிறார்