01.07.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July – 1 இன்றைய ராசிபலன் #astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

கூண்டில் சிக்கி ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தை.. ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டுக்கு மாற்றும் போது தப்பியோட்டம்..!

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி ஆக்ரோஷமாக காணப்பட்ட சிறுத்தை, வேறு கூண்டுக்கு மாற்ற முயன்ற போது தப்பியோடியது. செயல்படாத கல்குவாரி ஒன்றில் பதுங்கியிருந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த அந்த சிறுத்தை அதிகாலை கூண்டில் சிக்கியது. அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை வேறு கூண்டுக்கு மாற்ற முயன்ற போது அது தப்பியோடியது. அந்த சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். Source link

'மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட மாநில அரசுக்கு பாதுகாப்பில்லை' – யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

சென்னை: ”மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அரசுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை” என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத் தாக்கலை சில நாட்கள் முன் செய்தவர், இப்போது ஓவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று அரசியல் தலைவர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று சென்னை வந்த அவர், … Read more

இலங்கை மக்களின் திகிலூட்டும் பயணம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.   எரிபொருள் தட்டுப்பாட்டால் பலரின் தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாழ்வாதாரத்தை இழக்கும் இக்கட்டான நிலையையும் சந்தித்துள்ளனர்.  இலங்கையர்களின் திகிலூட்டும் பயணம்  தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள்  கடுமையான போக்குவரத்து நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் முழுமையாகச் செயற்படாததால், குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதிகமான பயணிகள் அவற்றில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் கூரையில் பயணிகள்  … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் 17-வது அதிபராக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்றுக்கொண்டார். அதிபராக இருந்த ரோட்ரிகோ டுடெர்டேவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் மார்கோஸ் ஜூனியர் வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைநகர் மணிலாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஆயிரக்காணக்கான பொதுமக்கள், சீன துணை அதிபர் வாங் கிஷன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார். இவர் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோஸின் மகன் … Read more

கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

கேரள மாநிலம் மலப்புறத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதும் சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்குள்ள ஆசாத் நகர் என்னுமிடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மினி லாரி வேகமாக மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயமடைந்தார். தற்போது அவருக்கு திருவங்காடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   Source link

திடீரென இடிந்த இலங்கை மைதான மேற்கூரை! அதிர்ஷ்டவசமாக தப்பிய வீரர்கள்

காலே கிரிக்கெட் மைதானத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. ஒரு கட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதேபோல் மைதானத்தில் இருந்த பெரிய கண்ணாடி சுவரும் திடீரென கீழே … Read more

எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: எம்பிஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக சென்னை பல்கலை அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி நிறுவனத்தில் டிசம்பர் 2021 எம்பிஏ நடந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் மீண்டும் ஆந்த்ராக்ஸ்; கொத்து கொத்தாக காட்டுப் பன்றிகள் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி காட்டுப் பன்றிகள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கேரள  மாநிலம், திருச்சூர் அருகே உள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள  நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தமிழ், தெலுங்கு, மலையாளம்,  இந்தி உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் இந்த நீர்வீழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இங்குள்ள வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ஏராளமான  காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்து விழுந்தன. … Read more

ரூ.2.64 கோடி ஹவாலா பணம்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக இதுவரை பிடிபட்ட பணம்!

உரிய ஆவணங்களின்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த மாதத்தில் மட்டும் ரூ.2.64 கோடி ஹவாலா பணங்கள் பிடிபட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்ட வந்த பையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து அவரது பையை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது அவரது பையில் கட்டு கட்டாக … Read more