உலக அளவில் மதுபானங்கள் மீதான போதை மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதுவும் பீருக்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மதுபிரியர்கள் மத்தியிலும் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கதான் செய்கிறது.
மதுபிரியர்களின் பீர் மீதான இந்த பிரியத்தை பல்ஸ் பார்த்த சிங்கப்பூரின் பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான ப்ரூவர்க்ஸ், ‘நியூப்ரூ’ என்ற பெயரில் புதிய வகை பீரை அறிமுகம் செய்துள்ளது. என்ன புதிய வகை என்கிறீர்களா? கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரை கொண்டு தயாரிக்கப்படுவதுதான் நியூப்ரு பீரின் தனிச்சிறப்பு.
சிங்கப்பூரின் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து. உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு வகை பீரை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கொரோனா இன்னும் முடியல; 110 நாடுகளில் பாதிப்பு உயர்வு – எச்சரிக்கும் WHO
சிங்கப்பூர் முழுவதும் மதுபிரியர்கள் மத்தியில் தற்போது இந்த பீர் பற்றிதான் பேச்சு. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக மதுபிரியர்கள் மகிழ்ச்சிஇந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பும், எதிர்பார்ப்பும் எகிறி உள்ளதால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக நியூப்ரூ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.