டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டு வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரகாண்டின் தனம் சிங் நகர் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி புஷ்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது; ஒவ்வொரு மாநிலங்களும் சொந்தமாக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
நாட்டிலேயே கோவாவில் மட்டும் தான் பொதுசிவில் சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.