வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நான் என் பெற்றோருக்கு மகளாகவும் என் கணவருக்கு மனைவியாகவும் என் அக்காகளுக்கு நல்ல தங்கையாகவும் நிறைவான வாழ்க்கையே வாழ்ந்திருக்கிறேன்.
ஆனால் என் இரண்டு பெண்கள் எனக்கு வாழ்க்கையில் நிறைய கற்று கொடுத்திருக்கிறார்கள்.
என் வயது 61.
என் பெண்கள் இருவரும் அவர்கள் திருமணத்திற்கு முன் இருந்ததை பார்த்து எனக்கு பயமாக இருக்கும். அயல் நாட்டில் ( ஆஸ்திரேலியா) வளர்க்கப் பட்ட இவர்கள் திருமணமான பின் எப்படி இருப்பார்களோ என்ற கவலை மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும்.
இருவருக்கும் திருமணம் ஆயிற்று. அவர்கள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளைகள் தான். நல்ல பிள்ளைகள். குற்றம் ஒன்றும் சொல்வதிற்கில்லை.
மனதிற்குள் திக் திக் தான்.
பெரியவளுக்கு திருமணமாகி 6 வருடம் ஆயிற்று. எப்போது குழந்தை பெற்றுக் கொள்வாய் என்று கேட்க முடியாது. கேட்டால் உதைப்பாள்.
ஒரு வழியாக அவளும் அம்மாவானாள். எனக்கு ஒரே சந்தோஷம். முதல் பேரக் குழந்தை. கொஞ்சிக் கொண்டே இருப்பேன்.
என் மகளின் பிறந்த நாள் வந்தது . அவள் மகன் பிறந்த பிறகு வந்த அவள் பிறந்த நாள்.
கேக் கட் பண்ணிணார்கள்.
முதல் துண்டை யாரும் எதிர் பாராமல் எனக்கு ஊட்டினாள் என் மகள்.
ஏன் எனக்கு கொடுக்கிறாய் என்று திக்கு முக்காடிக் கொண்டு கேட்டேன்.
அம்மா, இன்று நீ என்னைப் பிறப்பித்த நாள். உனக்கான நாள் என்றாள்.
அவள் மகன் அவளுக்கு காட்டி விட்டான் அம்மா என்பவள் யார் என்று!
ஒரு நாள் நானும் என் மகளுன் என் பேரனின் பள்ளிக்கு சென்றிருந்தோம் அவனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்கு.
என் மகள் அலுவலக ரீதியாக கை பேசியில் பேசிக் கொண்டிருந்தாள். நான் என் பேரனிடம் பேசிக் கொண்டே கார் இருக்கும் இடத்திற்கு நடந்து கொண்டிருந்தோம்.
அவனிடன் இன்று பள்ளியில் என்ன நடந்ததப்பா என்று கேட்டேன்.
பாட்டி, எது எங்களை மகிழ்விக்கும் என்பது பற்றி பேசிக் கொண்டோம் என்றான்.
உன்னை எதப்பா மகிழ்விக்கும் என்றாய் எனக் கேட்டேன்.
என் அம்மா என்னை அணைப்பதே என்னை மகிழ்விக்கும் என்றான். என் மனதில் உண்டான மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை. என் மகள் இன்னும் கை பேசியிலேயே இருந்தாள். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு பிறகு அவளின் பிறந்த தினம் வந்தது.
வழக்கம் போல் எனக்குத் தான் முதல் கேக் துண்டை ஊட்டிவிட்டாள்.
அவளிடம் சொன்னேன். உன் மகன் உனக்கு ஒரு பிறந்த நாள் பரிசு வைத்திருக்கிறான் என்றேன்.
அவனைப் பார்த்து என்ன என்று கேட்டாள்?
என் பேரனுக்கு 4 வயது. ஒன்றும் புரியவில்லை.
கண்ணா, உன்னை மகிழ்விக்கும் செயல் என்ன என்று பள்ளியில் சொன்னாய் என்று கேட்டேன்?
எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த போது அவன் சொன்னான், என் அம்மா என்னை அணைப்பதே என்னை மகிழ்விக்கும் என்றான்.
என் மகளின் கண்களில் கண்ணீர்.அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
என் கண்களிலும் கண்ணீர்.
என்ன சொல்ல? அம்மாவாகவும் பாட்டியாகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று!!
எல்லா அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்குமான என் அனுபவமிது.
அன்புடன்
மாலா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.