விஷால் ஆந்திராவில் அரசியலுக்கு வரப் போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் பரவும் தகவல் குறித்து நடிகர் விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.
விஷால் ஆந்திராவில் அரசியலுக்கு வரப் போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் பரவும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச அரசியலில் நுழைவதோ அல்லது சந்திர பாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடும் எண்ணமோ இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆந்திராவில் நான் அரசியலுக்கு வரப் போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நான் இதை முற்றிலும் மறுக்கிறேன். மேலும் இதைப் பற்றி எதுவும் தெரியாது. இதைப் பற்றி யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.
இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இது எனக்கு திரைப்படங்கள் நடிக்கும் எண்ணமே உள்ளது. அது மட்டும்தான். ஆந்திரப் பிரதேச அரசியலில் நுழைவதோ அல்லது சந்திர பாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடும் எண்ணமோ இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
— Vishal (@VishalKOfficial) July 1, 2022