நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துக்கொண்டார். அப்போது 350 மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.