கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் நகைகளை ஒரே இடத்தில் வைக்காமல், தனித்தனியே பிரித்து வைத்ததால் கொள்ளையர்களிடம் இருந்து 32 சவரன் தப்பியுள்ளது.
குளத்தூரை சேர்ந்த அரசு ஊழியரான வள்ளிவேல் என்பவர், தனது வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில், 40 சவரன் நகைகள், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரளித்தார்.
இது குறித்து அவரது மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை அவர் வீட்டில் பல இடங்களிலும் மறைத்து வைத்திருந்ததாகவும், அதனால் 8 சவரன் மட்டும் கொள்ளைபோனதும் தெரியவந்தது.