
அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் அவதார். இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன. இரண்டாம் பாகமான ‛அவதார் 2 – தி வே ஆப் வாட்டர்' படம் டிச., 16ல் வெளியாகிறது. இந்த படத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தில் ரொனல் என்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ‛டைட்டானிக்' புகழ் நடிகை கேட் வின்ஸ்லெட். இவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபற்றி கேட் வின்ஸ்லெட் கூறுகையில், ‛‛ரொனல் வலிமையானவள். ஒரு போர்வீராங்கனை. கடும் ஆபத்தை எதிர்கொண்டாலும், கருவில் இருக்கும் தனது குழந்தையுடன் தன் மக்களுடன் சேர்ந்து போராடுவாள்” என்கிறார்.
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கிய டைட்டானிக் படத்தில் நடித்த கேட் விஸ்ன்லெட் 25 ஆண்டுகளுக்கு பின் அவதார் 2 படம் மூலம் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.