மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் முருகாம்பாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணன் முருகாம்பாளிடம் கள்ள காதலை கைவிடும் படி கூறியுள்ளார். ஆனால் முருகம்பாள் நான் கள்ள காதலை கைவிட மாட்டேன். உனக்கு இங்கு இருக்க விருப்பமில்லை என்றால் வெளியே போ என்று கிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் நேற்று தூங்கி கொண்டிருந்த முருகாம்பாளை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து கிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் நடந்தவற்றை கூறி சரணடைந்துள்ளார். இதனையடுத்து ராஜா உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற காவல்துறையினர் முருகாம்பாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.