ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கறுவாப்பட்டை


நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. 

இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன.

கடுமையாக உயர்ந்துள்ள விலைகள் 

ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கறுவாப்பட்டை | Rising Prices Of Cinnamon Cardamom And Pepper

இதன்படி,  ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா 5,000 முதல் 6,000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் மிளகு 1,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஒரு கிலோ கிராம் ஏலக்காய் 2,300 ரூபா முதல் 2,400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கறுவாப்பட்டை | Rising Prices Of Cinnamon Cardamom And Pepper



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.