கொழுப்பு சத்து நமது உடலுக்கு தேவையான ஒன்று. இருப்பினும் ரத்ததில் கொழுப்பு சதவிகிதம் உயர்ந்தால், அது பல்வேறு நோய்களை உருவாக்கும். ஒரு வருக்கு கொலஸ்ட்ரால் இருந்தால், அவருக்கு இருதய ரத்த குழாய்கள் பாதிக்கும் நோய் வர வாய்ப்பிருக்கிறது.
நமது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் மேலும் நமது வேலைகளில் ஏற்படும் மாற்றம் நமது ரத்தில் உள்ள கொழுப்பு அளவில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் சாப்பிடும் சில உணவுகள் ரத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கிறது.இந்நிலையில் நாம் சாப்பிடும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளுக்கு மாற்று உணவாக இந்த உணவுகளை சாப்பிடலாம்.
ஆரஞ்ச் இறைச்சி
ஆரஞ்ச் இறைச்சி அதாவது ஈறல் உள்ளிட்ட உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். இது நல்ல கொழுப்பை உடலில் சேர்க்கிறது. இதை சாப்பிடுவதால் இதயத்தை பாதிக்கும் நோய்கள் ஏற்படாது.
சிப்ஸ்க்கு பதிலாக பாப்கார்ன்
வீட்டிலேயே செய்யும் பாப்கார்ன் சாப்பிடுவது நல்லது. தியேட்டரில் கிடைக்கும் பாப்கார்னில் பட்டர் மற்றும் கொழுப்பு சத்து இருக்கிறது. ஆனால் வீட்டில் செய்யும் பார்ப்கார்னில் இது இருக்காது.
வெண்ணெய்க்கு பதில் ஆலிவ் ஆயில்
வெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயில் அல்லது வெஜிடப்பிள் ஆயில் பயன்படுத்துலாம். கொலஸ்ட்ரால் உடையவர்களை இதை பயன்படுத்தால் மிகவும் நல்லது.
ஐஸ்கீர்க்கு பதிலாக குளிரூட்டப்பட்ட தயிர்
குளிரூட்டப்பட்ட தயிரில் கொழுப்பு இருந்தாலும் இதில் கால்சியம், சிங்க், மெக்னீஷியம், பொட்டாஷியம் இருக்கிறது. ஆனால் ஐஸ்கிரீமில் சக்கரை அளவும் அதிகம் இருக்கிறது. அதேவேளையில் கொழுப்பு சத்தும் அதிகம் உள்ளது.