ஜெருசலேம்,
இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அங்கு நவம்பர் 1-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நாடு 4 ஆண்டுகளில் 5-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.
இஸ்ரேல் பிரதமரரக இருந்த நப்தாலி பென்னட் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அவரது அரசில் வெளியுறவு மந்திரி பதவி வகித்த யாயிர் லாபிட், காபந்து அரசின் பிரதமராகி உள்ளார்.
இந்த நிலையில், “இந்தியாவின் உண்மையான நண்பராக இருப்பதற்கு நப்தாலி பென்னட்க்கு நன்றி. எங்களின் பயனுள்ள தொடர்புகளை நான் மிகவும் மதிக்கிறேன், மேலும், நீங்கள் மேற்கொள்ள இருக்கும் பணிகளில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட், ” நீண்ட மற்றும் வலுவான நட்புக்கு நன்றி எனது அன்பு நண்பரே.” என்று டுவீட் செய்துள்ளார்.