இனி மாதுளை பழத்தின் தோலை தூக்கி வீசாதீங்க! இந்த நோய்கள் எல்லாம் போக்கும் அற்புத பயன்கள் ஒளிந்துள்ளதாம்


 பொதுவாக மாதுளை பழத்தை வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு, அதனுடைய தோலை தூக்கி வீசி விடுவோம்.

ஆனால் தூக்கி ஏறியும் தோலில் கூட அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதனை கழுவி நன்கு சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, அதை பொடி செய்து காற்று புகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை பல்வேறு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். வெந்நீரில் கலந்தோ பாலில் கலந்தோ குடிக்கலாம்.

அல்லது வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்குப் பதிலாக இந்த மாதுளை தோலின் பொடியைச் சேர்த்து கொதிக்க வைத்து, டீ செய்து குடிக்கலாம்.

அதுமட்டுமின்றி இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை இந்த மாதுளையின் தோலில் இருந்து பெற முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

​     

இனி மாதுளை பழத்தின் தோலை தூக்கி வீசாதீங்க! இந்த நோய்கள் எல்லாம் போக்கும் அற்புத பயன்கள் ஒளிந்துள்ளதாம் | Health Benefits Of Pomegranate Peels Powder

  • ஒரு ஸ்பூன் மாதுளை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் முகம் பொலிவு பெறுவதோடு பிக்மண்டேஷன் உள்ளவர்கள் இதை வாரம் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • மாதுளை சாப்பிட்டதும் அந்த தோலை கீழே வீசாமல் அதை இடித்து சாறெடுத்து வெறும் 50 மில்லி அளவில் ஒரு மாதத்துக்குக் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் குறைய ஆரம்பிக்கும்.
  • மாதுளையின் தோலில் அதிக அளவிலான ஆக்சிஜனேற்றிகள் இருக்கின்றன. இது காது கேளாமை மற்றும் காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். காது கேளாமை பிரச்சினை உள்ளவர்கள் மாதுளையின் தோலை உலர வைத்து பொடி செய்து சாப்பிட்டு வரலாம். 
  • மாதுளையின் தோலில் பாலிஃபினைல்கள் அதிகமாக இருக்கின்றன. இவை புற்றுநோய் வராமல் தடுக்க உதவுவதோடு வயிற்றில் உண்டாகும் அழற்சி ஆகியவற்றை சரிசெய்து குடல் புற்றுநோய் அபாயம் ஏற்டாமல் தடுக்க உதவுகிறது.
  • மாதுளம் பழத்தின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை தினமும் இரவில் தூங்கப் போகும் முன்பாக குடித்து வருவது நல்லது. இது இரவில் கல்லீரலின் செயல்பாடை சீராக வைத்திருக்க உதவி செய்யும். அதனால் கல்லீரலில் தேங்கும் கொழுப்புகளும் கரையும். 
  • கல்லீரல் கொழுப்பு பிரச்சினை மற்றும் ஹெபடைடிஸ் ஆகியவற்றால் அவதிப்படுகிறவர்கள் இந்த டீயை காலை, இரவு என இரண்டு வேளையும் கூட குடித்து வரலாம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.