இன்று புதிய தொழிலாளர் விதிகள் அமல்… வாரம் 3 நாள் விடுமுறை!!

புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது.

புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.

protest

இந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் இன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டங்களின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம்.

ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு 3 வார விடுமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரம் மாறாது.

office

ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணி நேர பணிக்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

அதேபோல் ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம்,மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும்.

இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதன் மூலம் தனியார் துறைகளில் சில ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் குறையலாம்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.