சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுடிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்கான உறவுகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்;கான ஜப்பான் தூதுவர் ஹிதஹி மிசிகோசி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இதனைக் கூறினார். இந்த பேச்சுவார்த்தை கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இலங்கையுடனான பொருளாதார சமூக கலாசார உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தூதுவர் இதன்போது குறிப்பிட்டார். இலங்கைக்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள், கேஸ், தொழில்வாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்கு ஒத்துழபை;பு வழங்குவதாக ஓமான் தூதுவர் அஹமட் அலி சயிட் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தை கூறினார். தனது பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ள அஹமட் அலி சயிட், ஓமானுக்கு பயணமாகவுள்ளார். இலங்கையர்களுக்கு ஓமானில் தொழில்வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமர்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்..