ஈரோடு மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் தவட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவரது மனைவி திவ்யதர்ஷினி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தநிலையில் மணிகண்டன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு சிகுச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அந்தியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.