உணவகங்களுக்கு செல்லும் இலங்கையர்களின் தற்போதைய நடவடிக்கை


சாப்பாடு வாங்க உணவகங்களுக்கு வருபவர்கள் அதன் விலையை கேட்டுவிட்டு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை மட்டுமே குடித்து விட்டுச் செல்கின்றனர் என அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.  

உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எரிபொருள் நெருக்கடி

உணவகங்களுக்கு செல்லும் இலங்கையர்களின் தற்போதைய நடவடிக்கை | Increase In Food Prices

எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் 80 வீதமான  உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் 50 சதவீத சிற்றுண்டிசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடி தொடர்ந்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து   உணவகங்களும் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தண்ணீரை மாத்திரம் குடிக்கும் மக்கள் 

உணவகங்களுக்கு செல்லும் இலங்கையர்களின் தற்போதைய நடவடிக்கை | Increase In Food Prices

உணவு மளிகைப் பொருட்களின் விலைவாசி உயர்வால்,  உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சாப்பாடு வாங்க உணவகங்களுக்கு வருபவர்கள் அதன் விலையை கேட்டுவிட்டு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை குடித்து விட்டு செல்கின்றனர்.

உணவுக்காக  உணவகங்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாகவும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான பொருட்கள் விநியோகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கூறும் அவர், தற்போதைய சூழ்நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு கூலி வேலைக்குச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.