இந்தியாவில் சமீபத்திய காலமாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றது. புதுமைகளின் இடமாகவும், ஸ்டார்ட் அப்களின் தொடக்கமாக இருந்தாலும், இங்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக பல வணிகங்களும் உண்டு. பல பாரம்பரிய நிறுவனங்களும் உண்டு. அதில் சிலவற்றை பார்க்கலாம்.
ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!
பல ஆண்டுகளாக நாம் அவற்றின் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அது எந்தெந்த நிறுவனங்கள்? வாருங்கள் பார்க்கலாம்

பாரி & கோ(1788)
1780ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தாமஸ் பார் என்ற வெல்ஷ்மே., வங்கி மற்றும் மற்றும் துண்டு வணிகத்தினை தொடங்கினார். 1800ன் தொடக்கத்தில் சர்க்கரை மற்றும் மதுபான வணிகத்தினையும் தொடங்கினார். இது ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரீஸ் அண்ட் சுகர் ஃபேக்டரீஸ் லிமிடெட் என பிரிக்கப்படுவதற்கு முன்பு, பல தசாப்தங்களாகவே வெற்றிகரமான வணிக நிறுவனமாகவும் இருந்து வந்தது.
1962ல் நிறுவனங்கள் மீண்டும் இணைக்கப்பட்டன. எனினும் 1981ல் முருகப்பா குழுமத்தினால் கையகப்படுத்தப்பட்டன. பார் & கோ, தற்போது EID பாரி லிமிடெட் 200 ஆண்டுகளுக்கு மேல் பழையான ஒரு நிறுவனமாகும். இது உரங்கள், ஊட்டச்சத்து மருந்துகள் என பலவற்றினை உற்பத்தி செய்து வரும் ஒரு நிறுவனமாகும்.

டைம்ஸ் குழு (1838)
பென்னட், கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் அல்லது தி டைம்ஸ் குழுமம், இந்தியாவின் மிக பழையான நிறுவனங்களில் ஒன்றாகும். இதில் சாகு ஜெயின் குடும்பம் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது. இன்று இந்த குழுவில் தி டைம்ஸ் ஆப் இந்தியா, திஎக்னாமிக் டைம்ஸ், நவ்பாரத் டைம்ஸ், மூவிஸ் நவ், ஜூம், எம் என் எக்ஸ், டைம்ஸ் இண்டர்நெட், ரேடியோ மிர்ச்சி என பல துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமம் (1857)
இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனமாக இருக்கும் ஆதித்யா பிர்லா குழுமம் , பல்வேறு குடும்ப வணிகங்களில் ஒன்று. இதனை சேத் சிவ நாராயண பிர்லாவால் 1857ல் தொடங்கினார். இது ஒரு பருத்தி வணிக நிறுவனமாக தொடங்கப்பட்டது. தற்போது குமார் மங்கலம் பிர்லா தலைமையில் பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றது.
குறிப்பாக உலோகங்கள், சிமெண்ய், நிதி சேவைகள், தொலைத் தொடர்பு துறை மற்றும் சில்லறை வணிகம் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றது.

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (1863)
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் 1863ல் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது ஸ்காட்லாந்தின் வாலஸ் சகோதரர்களால் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். இது தேயிலை வணிகம் செய்து வந்த ஒரு நிறுவனமாகும்.
1870களில் பருத்தி, எண்ணெய் மற்றும் கப்பல் போக்குவரத்து, தேக்கு ஆகியவற்றில் ஆர்வமுள்ள நிறுவனமாக இருந்தது. ஸ்காட்லாந்து சகோதர்களிடம் இருந்து விஸ்சாஞ்சி நிறுவனம் வாங்கியது. அதன் பின்னர் வாடியா குழுமத்தினால் கைபற்றப்பட்டது. இன்று இது தேயிலை, காபி, மின்சார வாகன உதிரி பாகங்கள், ஹெல்த்கேர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல வணிகத்தினையும் வெற்றிகரமாக செய்து வருகின்றது.

‘ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம் (1865)
இந்தியாவின் மதிப்புமிக்க பழைமையான வணிக குழுமங்களில் ஒன்றாக ‘ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம் பார்க்கப்படுகின்றது. 1865ல் லிட்டில்வுட் பல்லோஞ்சி என்ற கட்டுமான நிறுவனமும் தொடங்கப்பட்டது. இது மலபார் ஹில், பிரபோர்ன் ஸ்டேடியம், ஜவஹர்லால் நேரு ஸ்டேட்டியம், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம், போன்றவற்றில் ஒரு நீர்த்தேக்கம் போன்ற இந்தியாவில் சில முக்கிய திட்டங்களை அவர்கள் கட்டியுள்ளனர்.
தற்போது இந்த நிறுவனம் உள்கட்டமைப்பு, எரிவாயு, முதலீடு எண்ணெய் உள்ளிட்ட பல வணிகங்களையும் செய்து வருகின்றது.

டாடா குழுமம் 1868
இன்றும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக இருக்கும் டாடா குழுமம் 150 ஆண்டுகள் பழமையான வணிக குழுமங்களில் ஒன்றாகும். இது கடந்த 1868ம் ஆண்டில் இந்திய தொழிற்துறையின் தந்தை என்றழைக்கப்பட்ட ஜாம்செட்ஜி டாடாவால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
ஜாம்செட்ஜி டாடாவின் கவனம் மூன்று முக்கிய துறைகளில் அப்போது இருந்தது, ஒன்று இரும்பு தொழிலில் கவனம் செலுத்துவது, இரண்டாவது நீர்மின்சாரத்தினை உருவாக்குவது மற்றும் நாட்டில் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தினை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
இன்று இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது. இது கெமிக்கல்கள், பாதுகாப்பு துறை, வாகனம், விமான நிறுவனங்கள், எஃப் எம் சி ஜி, ஹாஸ்பிட்டாலிட்டி, ஐடி துறை, சிமெண்ட், ஸ்டீல் உள்ளிட்ட பல வணிகங்களை செய்து வருகின்றது. இது தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவையும் செய்து வருகின்றது.

பாம்பே டையிங்க் கம்பெனி (1879)
பாம்பே டையிங்க் கம்பெனி 1879ம் ஆண்டு நவ்ரோஸ்ஜி வாடியாவல் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது ஆரம்பத்தில் சிறிய டையிங் நிறுவனமாக தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது வாடியா குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். 140 ஆண்டுகளுக்கும் பிறகும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை கண்டு வரும் ஒரு நிறுவனமாக உள்ளது.

கோத்ரேஜ் 1897
இந்தியாவின் பழமையான வணிக குழுமங்களில் ஒன்று கோத்ரேஜ். இது கடந்த 1897ல் நிறுவப்பட்டது. இது பிரோஜ்ஷா கோத்ஜ்ரேஜ் மற்றும் புர்ஜோர்ஜி கோத்ஜ்ரேஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். 1897ல் ஒரு பூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சோப்பு வணிகத்திலும் இந்த நிறுவனம் இறங்கியது. 1955ல் இந்தியாவில் முதல் தட்டச்சு இயந்திரத்தினையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இன்று விண்வெளி மற்றும் விவசாயம், வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், மரச்சாமன்கள் போன்ற பல வியாபாரங்களையும் செய்து வருகின்றது.
From Tata group to Parry & co: here are 8 of oldest indian companies
From Tata group to Parry & co: here are 8 of oldest indian companies/என்னது இந்த நிறுவனத்துடைய வயது 234-ஆ..!!