நடிகை ஸ்ருதி ஹாசன், தான் மோசமான சில ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக, சமீபத்தில் சமூக ஊடகங்களில் கூறினார். அப்போது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) மற்றும் எண்டோமெட்ரியோசிஸுடனான தனது போராட்டத்தைப் பற்றி அவர் வெளிப்படுத்தினார்
“என்னுடன் உடற்பயிற்சி செய்யுங்கள். எனது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன் – சமநிலையின்மை, வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் இது ஒரு கடினமான போராட்டம் என்பதை பெண்கள் அறிவார்கள். ஆனால் அதை ஒரு போரட்டமாக பார்க்காமல், என் உடல் அதன் சிறந்ததைச் செய்யும் ஒரு இயல்பான இயக்கமாக அதை ஏற்றுக்கொள்கிறேன்.
சரியாக சாப்பிட்டு, நன்றாக தூங்கி, என் வொர்க்அவுட்டை அனுபவிப்பதன் மூலம் நான் நன்றி சொல்கிறேன் – என் உடல் இப்போது சரியாக இல்லை, ஆனால் என் இதயம் சரியாக இருக்கிறது.
ஆரோக்கியமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் அந்த மகிழ்ச்சியான ஹார்மோன்கள் ஓடட்டும்! நான் கொஞ்சம் பிரசங்கிக்கிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் இந்த சவால்களை ஏற்றுக்கொள்வதற்கு இது ஒரு பயணம், ”என்று அவர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறினார்..
அதனுடன் உள்ள வீடியோவில், நடிகர் ராமையா வஸ்தாவய்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையும், கார்டியோ மற்றும் கோர் ஸ்ட்ரெச்கள் போன்றவற்றையும் செய்வதையும் காணலாம்.
பி.சி.ஓ.எஸ் என்பது என்ன?
பி.சி.ஓ.எஸ் என்பது ஹார்மோன் கோளாறு ஆகும், இது இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே பொதுவானது, அதே சமயம் எண்டோமெட்ரியோசிஸ் என்பது வலிமிகுந்த கோளாறு ஆகும், இதில் பொதுவாக உங்கள் கருப்பையின் உட்புறத்தில் இருக்கும் திசுவைப் போன்ற ஒன்று – எண்டோமெட்ரியம் – உங்கள் கருப்பைக்கு வெளியே வளரும். எண்டோமெட்ரியோசிஸ்’ கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள் மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள திசுக்களை உள்ளடக்கியது.
20 வயதிற்குட்பட்ட பெண்களில் PCOS மிகவும் பொதுவானது, 5இல் 1 பெண்ணுக்கு இது ஏற்படுகிறது, அதே நேரத்தில் எண்டோமெட்ரியோசிஸ் பொதுவாக 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களில் கண்டறியப்படுகிறது,” என்று நொய்டாவின் மதர்ஹுட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சந்தீப் சாதா இந்திய எக்ஸ்பிரஸ்.காம் உடனான நேர்காணலின்போது கூறினார்.
நிபுணரின் கூற்றுப்படி, PCOS உடைய நோயாளி குறிப்பிடத்தக்க இடுப்பு வலியைப் புகாரளித்தால், அது PCOS உடன் மற்றொரு நிலையான, கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அல்லது எண்டோமெட்ரியோசிஸ் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, ஏனெனில் PCOS மாதவிடாய் காலத்தில் வலியை ஏற்படுத்தாது.
என்ன செய்ய முடியும்?
பிசிஓஎஸ் அல்லது எண்டோமெட்ரியோசிஸுக்கு அறியப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை, எனவே, அறிகுறிகளை நிர்வகிக்க சிகிச்சையுடன் கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியமாகும்.
டாக்டர் சாதாவின் கூற்றுப்படி, பிசிஓஎஸ் ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மூலம் நிர்வகிக்கப்படலாம், இது ஹார்மோன்களை நிலைநிறுத்த உதவுகிறது, எனவே மாதவிடாய்களை ஒழுங்குபடுத்துகிறது.
நீங்கள் கருத்தரிக்க முயற்சி செய்து, கருத்தடை செய்ய முடியாவிட்டால், மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் ஹார்மோன் சிகிச்சை மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம், என்றார்.
எண்டோமெட்ரியோசிஸுக்கு, நீங்கள் சுழற்சி மாத்திரையை (extended-cycle pill) எடுத்துக் கொள்ளலாம், இது உங்கள் மாதவிடாயை குறைக்கும் அல்லது அவற்றை அகற்றும்.
” ஹார்மோன் கருப்பையக சாதனம் (intrauterine device- IUD) மற்றொரு விருப்பம். வலி மற்றும் இரத்தப்போக்கு குறைக்க உதவும் இது செருகப்படலாம்.
எண்டோமெட்ரியோசிஸிற்கான அறுவை சிகிச்சை உங்கள் கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம் என்று சாதா கூறினார்.
உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது?
சீரான உணவுடன் வழக்கமான உடற்பயிற்சி PCOS அறிகுறிகளை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“