சீனாவில் அரசுக்குச் சொந்தமான மூன்று பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி டாலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க உள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின் மிகப்பெரிய கொள்முதல் ஆணை கிடைத்திருப்பது ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்துக்கு பெருமளவில் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஏ320 நியோ வகையைச் சேர்ந்த தலா 96 விமானங்களை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 100 விமானங்களை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.