புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 18,819 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 பேர் பலியாகினர்.
ஜூன் 1ல் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 2745 ஆக இருந்தது. அடுத்த ஒரே மாதத்தில் ஒன்பது மடங்கு உயர்ந்து ஜூன் 30ல் 18,819 ஆனது.இந்தியா உட்பட உலகளவில் 110 நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 பி.ஏ. 5 இதற்கு காரணமாக உள்ளன.இந்தியாவில் கேரளா மஹாராஷ்டிரா, தமிழகம் கர்நாடகா மேற்கு வங்கம் டில்லி ஆகியவை ‘டாப்’ – ஆறு இடங்களில் உள்ளன. நாட்டின் மொத்த பாதிப்பில் 78% இந்த 6 மாநிலங்களில் பதிவாகிறது. நாட்டில் கடந்த பிப். 20ல் தினசரி பாதிப்பு 18 ஆயிரமாக இருந்தது. இதன்பின் குறைந்து வந்த கொரோனா கடந்த ஜூன் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
4 மாதங்களுக்குப்பின் ஒரே நாள் பாதிப்பு 18 ஆயிரத்து தாண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் முககவசம் சமூக இடைவெளி தடுப்பூசி போன்ற தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement