ஒரே நேரத்தில் 8000 பேருக்கு பதவி உயர்வு: ஆச்சரியத்தில் தலைமை செயலக பணியாளர்கள்

மத்திய அரசின் தலைமைச் செயலகத்தில் ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பதவி உயர்வு குறித்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!

மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் இந்த பதவி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மத்திய தலைமை செயலகம்

மத்திய தலைமை செயலகம்

மத்திய தலைமை செயலகத்தில் பதவி உயர்வு பெற்றவர்களில் 327 இயக்குனர்கள், 1,097 துணை செயலாளர்கள், 1,472 பிரிவு அலுவலர்கள் என, அனைவரும் மத்திய செயலகப் பணியைச் சேர்ந்தவர்கள். மத்திய செயலகத்தில் பதவி உயர்வு பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை 4,734 ஆகும்.

பதவி உயர்வு பட்டியல்

பதவி உயர்வு பட்டியல்

அதேபோல் ஸ்டெனோகிராஃபர்கள், முதன்மை பணியாளர்கள் அதிகாரிகள், எழுத்தர்கள் மற்றும் மத்திய செயலக ஸ்டெனோகிராபர்கள் மற்றும் மத்திய செயலக எழுத்தர் சேவையில் உள்ள மற்றவர்களும் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதன்மை தனி செயலாளர்கள்
 

முதன்மை தனி செயலாளர்கள்

இந்த பதவி உயர்வுகளில் 157 முதன்மை பணியாளர் அதிகாரிகள் மற்றும் 153 மூத்த முதன்மை தனியார் செயலாளர்கள், மத்திய செயலக ஸ்டெனோகிராபர்கள் ஆகியோர்களும், 1,208 முதன்மை தனி செயலாளர்களும் உள்ளனர். இந்த பிரிவில் பதவி உயர்வு பெற்ற மொத்த அதிகாரிகளின் எண்ணிக்கை 2,966 ஆகும்.

பழங்குடியினர்

பழங்குடியினர்

எனவே மேற்கண்ட இரண்டையும் சேர்த்து மொத்தம், 8,089 பணியாளர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அவற்றில் 727 பட்டியல் சாதியினருக்கும், 207 பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 5,032 பதவி உயர்வுகள் முன்பதிவு செய்யப்படாத பதவிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

மத்திய செயலக சேவை என்பது குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளை உள்ளடக்கியது. மேலும் மத்திய அரசு அமைச்சகங்களில் நிர்வாகப் பணியின் முதுகெலும்பாக இவர்கள் உள்ளனர். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் போட்டித் தேர்வுகள் மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

2019ல் பதவி உயர்வு

2019ல் பதவி உயர்வு

கடந்த 2019-ம் ஆண்டு இந்த மூன்று சேவைகளிலும் 4,000 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றனர் என்பதும், அதன்பிறகு தற்போது மிகப்பெரிய அளவில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம்

போராட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய செயலகப் பணியாளர்கள் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு தாமதமாகி வருவதைக் கண்டித்து நார்த் பிளாக்கில் போராட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக வழக்கமான பதவி உயர்வுகள் ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பதவி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Order issued promotion to 8,000 Central Secretariat staffs!

Order issued promotion to 8,000 Central Secretariat staffs! | ஒரே நேரத்தில் 8000 பேருக்கு பதவி உயர்வு: ஆச்சரியத்தில் தலைமை செயலக பணியாளர்கள்

Story first published: Friday, July 1, 2022, 15:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.