கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேற எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். கட்சியில் முடிவெடுக்கும் உரிமை தற்போது பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவு அதனை முடக்குவது போல் அமைந்துள்ளது என்று, அந்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும், கட்சித் தலைமை என்பது ஒற்றைத் தலைமையாக இருக்க வேண்டும் என்றும், மனுதாரர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக்க வேண்டும் என்றும் ஒரே குரலாக பேசியுள்ளனர் என்று, அந்த மனுவில் தெரிவிக்க குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் ஓ பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராகவும், கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும் உள்ளது என்று, எடப்பாடி பழனிசாமி செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.