பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் கடந்த 29ம் தேதி காலமானார்.
இந்த துயர செய்தி ஒட்டுமொத்த திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி மீனாவின் ரசிகர்களையும் உலுக்கியது.
கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததே வித்யாசாகரின் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவரது மரணம் குறித்து தவறான தகவல்களும் சமூகவலைத்தளங்களில் உலாவரத்தொடங்கின.
— Meena Sagar (@Actressmeena16) July 1, 2022
இதுகுறித்து முதன்முறையாக டுவிட் செய்துள்ள மீனா,
என் கணவர் வித்யாசாகர் மரணத்தால் மனமுடைந்து போயுள்ளேன். பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் எங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு எங்களது தனிப்பட்ட விஷயங்களுக்கு, மதிப்பளித்து இனியும் இதுகுறித்து எந்தவொரு தவறான செய்தியையும் ஒளிபரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கடினமாக சூழலில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், தமிழக முதல்வருக்கும், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.