சுமார் 15% கிக் ஊழியர்கள் சராசரியாக மாதம் 5,000 ரூபாய் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து Gigpulse என்ற அறிக்கை கிரியா பல்கலைக்கழககத்தின் லீட் வெளியிட்டுள்ளது. இது கிக் தொழிலாளார்களின் அன்றாட வேலை மற்றும் நிதி பிரச்சனை பற்றியும் கூறியுள்ளது.
அதெல்லாம் சரி கிக் தொழிலாளர்கள் என்றால் என்ன? இவர்கள் எந்த மாதிரியான பணியினை செய்கின்றனர். எந்த மாதிரியான பிரச்சனைகலை எதிர்கொள்கின்றனர். ஆய்வு முடிவு என்ன சொல்கிறது வாருங்கள் பார்க்கலாம்.
ஆகாஷ் அம்பானிக்கு ஆரம்பிக்கும் சவால்.. ஏர்டெல்லில் கூகுள் முதலீடு செய்ய CCI ஒப்புதல்!
யார் இந்த கிக் தொழிலாளர்கள்?
எந்தவித எதிர்கால பாதுகாப்பும், செய்யும் வேலைக்கு எந்த நிச்சயமும் இல்லாமல் இருக்கும் வரைக்கும் உயிர்வாழ் என்ற அர்த்தத்தில் Get It Going (GIG) என்று வாழ்க்கையை தள்ளிக் கொண்டு செல்லவேண்டிய நிலையில் இருக்கும் அன்றாடங் காய்ச்சிகள் என்கிற பொருளில் தான் இவர்கள் GIG தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
கிரெடிட் கார்டு இல்லை
மேற்கண்ட இந்த ஆய்வில் கிக் தொழிலாளர்களில் 80% அதிகமானோர் கிரெடிட் வைத்திருக்கவில்லை. அதில் மூன்றில் 2 பங்கு பேருக்கு தேவை இருக்கிறது. இடில் 6.6% பேர் தற்போது அல்லது நிலுவையில் உள்ள கடன்களையும், 11.5% பேர் செயலில் உள்ள தவணை தொகையையும், 26.3% பேர் தாங்கள் கூட வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கடன் பெறுவதாகவும் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இளைஞர்களின் நிலை என்ன?
கிக் தொழிலாளர்களில் சராசரியாக 27 வயதுடைய இளைஞர்களில், 37% பேர் திருமணமானவர்கள். 29% பேர் குழந்தைகளுடனும், 28% பேர் புலம்பெயர்ந்தவர்கள்.
சுமார் 60% பேர் தங்களது குடும்பத்தினை காக்க வேலை செய்ய தூண்டப்படுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் 18% பேர் கிக் ஒர்க் கூடுதலாக பாக்கெட் மணி கிடைக்கும் என்பதான் பணிபுரிவதாகவும் கூறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இன்சூரன்ஸ்
20% கிக் தொழிலாளர்கள் மட்டுமே இன்சூரன்ஸை ஒரு சாத்தியமான உத்தியாகப் பார்க்கிறார்கள். கூடுதலாக 27% பேர் மட்டுமே சொந்தமாக காப்பீடு செய்கிறார்கள், 43% பேருக்கு காப்பீடு இல்லை. இருப்பினும், 49% பேர் கோவிட் தங்கள் காப்பீட்டு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வைத்ததாகக் கூறுகின்றனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளிடமிருந்து விபத்துக் காப்பீட்டைப் பெறுகிறார்கள்.
யார் யார் கிக் தொழிலாளர்கள்?
ஒரு தையல்காரரிடம் ஒரு துணி தைக்க கொடுத்திருக்கிறோம். அதனை தைத்து முடித்து விட்டால் உங்களுக்கும் தையல்காரருக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிந்து விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களான உபர், ஓலா, சோமேட்டோ, ஸ்விக்கி போன்றவை வழங்கும் வேலை வாய்ப்புகளின் தன்மையும் அதுதான். இந்த உணவுப் பார்சல்களை கொண்டு போய் கொடுத்தால் இருபது ரூபாய். ஆர்டர் இல்லையேல் வருமானம் கிடையாது.
கிக் ஊழியர்கள் அதிகரிக்கலாம்
நீங்கள் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்தாலும் நிரந்தர ஊழியரும் கிடையாது. பிஎஃப் கிடையாது. வேறு எந்த வகையான சலுகையும் கிடையாது. சமீபத்திய அறிக்கை ஒன்று அமெரிக்காவின் 40% வேலை வாய்ப்புகள் விரைவிலேயே GIG வேலைகளாக மாறி விடும் என்று கூறுகின்றன. இது ஓரு புறம் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டாலும், இதில் எட்டு மணி நேர வேலை, குறிப்பிட்ட ஷிப்டுக்குக் போக வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் இல்லை. நீ விரும்பும் நேரத்தில், விரும்பும் கம்பெனிக்கு வேலை செய்யலாம், விருப்பம் இல்லையெனில் செய்யாமலும் போகலாம்.
முதலாளித்துவம்
பல நாடுகளிலும் இந்த GIG வேலை முறையினை கவர்ச்சிகரமான, சுதந்திரமான, இளைஞர்களுக்கு பிடித்தமான வேலையாக சித்தரிக்க படுகின்றது. ஆனால் இதன் பின்னணியில் முதலாளித்துவம் இருப்பதை மக்கள் உணர்வதில்லை. ஏனெனில் குறைந்தபட்ச ஊதியம், பணிப்பாதுகாப்பு, ன்சன், பணிக்கொடை, ஓய்வுதியம், குழந்தைகள் கல்வி, மருத்துவ பாதுகாப்பு , தொழிற்சங்கம், தொழிலாளர் சட்டங்கள் போன்ற எந்த தொல்லையும் நிறுவனங்களுக்கு இல்லை. ஆக இப்படி இருக்கும்போது நிறுவனங்கள் இதனை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் அந்த கிக் தொழிலாளர்களின் வாழ்க்கையின் பின்னணியில் இருக்கும் சோகங்களை இந்த ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டுவது 100/100 உண்மையே.
over 15% of gig employees face an average of Rs.5000 a month in financial shortfalls
Over 15% gig workers face financial deficit of Rs.5000 on average/கிக் தொழிலாளர்களின் மோசமான நிலை.. கவலையளிக்கும் ஆய்வறிக்கை.. ஏன்?