கும்பகோணம்: கும்பகோணம் சுவாமி மலையில் பழங்கால லட்சுமி, சரஸ்வதி சிலைகளை விற்க முயன்ற ரஞ்சித், உதயகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தனிப்படை போலீசார் சிலைகளை வாங்குவது போல் நடித்து இருவரையும் கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளை எந்தக்கோயிலில் இருந்து திருடப்பட்டது அவற்றின் தொன்மை குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறாரகள்.
