செகண்ட் இன்னிங்சை தொடங்கிய மன்சூர் அலிகான்… கவனம் ஈர்க்கும் டான்ஸ் வீடியோ

90 காலகட்டங்களில கொடூர வில்லன் என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் மன்சூர் அலிகான். 1990-ம் ஆண்டு வெளியான சுப யாத்ரா என்ற மலையாள படத்தின் பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வேலை கிடைச்சிடுச்சி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஆனால் 1991-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் கொடூர வில்லனாக நடித்தன் மூலம் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் பெரிய புகழ் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என நடித்து வந்த இவர், தமிழில் சமீப காலமாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாது தானே தயாரித்து சில படங்களை இயக்கியுள்ள மனசூர் அலிகான், நடனமாடுவதிலும் புகழ்பெற்றவர்.  கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா, சக்கு சக்கு வத்திக்குச்சி, காபி தண்ணி போடட்டுமா உள்ளிட்ட பல பாடல்களில் தனது சிறப்பான நடனத்திறமையை வெளிக்காட்டியிருப்பார் மன்சூர் அலிகான்.

இந்நிலையில், சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் பின்னணியில் ஒலிக்கும்படியான ஒரு காட்சி அமைந்திருக்கும். இது தொடர்பான இன்டர்வியூ ஒன்றில் பேசிய விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவரை பார்க்கும்போது அவருக்காக எதாவது எழுத வேண்டும் என்று தோனும் என கூறியிருந்தார்.

மேலும் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் கதையை அவரை நினத்துதான் எழுதினேன் என்றும் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்ளில் வைரலாக பரவிய நிலையில், லோகேஷ் அடுத்து இயக்கும் படங்களில் கண்டிப்பாக மன்சூர் அலிகானுக்கு வெயிட்டான ஒரு கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்தருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது மன்சூர் அலிகான் டான்சர்களுடன் நடன பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.