திரைத்துறையில் தற்போது சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகைகளுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருப்பதுதான்.

பெரும்பாலான சீரியல் நடிகைகள் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.


அவர்கள் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருதோடு மட்டுமல்லாமல் வலைதளங்களில் அவர்களுக்கான ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உதவுகிறது என்றே சொல்லாம்.


இந்த வகையில் பல சீரியல் நடிகைகள் தங்களது சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கிலான ஃபாலோர்யர்களை வைத்துளளனர். இதில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவர் பவித்ரா ஜனனி.


விஜய் டிவி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பவித்தா தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த சீரியலில் அபி கேரக்டரில் நடித்து வரும் இவரும், வெற்றியும் ஒன்று சேர்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


சீரியல் மட்டுமல்லாது சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகினறன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“